search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதை நெல் விற்பனை செய்யக்கூடாது - அதிகாரி எச்சரிக்கை
    X

    விதை நெல் விற்பனை செய்யக்கூடாது - அதிகாரி எச்சரிக்கை

    • விதை நெல் விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • புதிய விதை விற்பனை உரிமம் பெற விண்ணப்பம் செய்வோர் இணையதளம் வாயிலாகவும், ஈரோடு, விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவும் உரிய ஆவணங்களை கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    தாராபுரம் :

    விதை நெல் விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் மாயகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தாராபுரம் வட்டாரத்தில் விற்பனை உரிமம் பெற்ற 132 விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விதை விற்பனை நிலையங்கள் அனைத்தும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விதை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். தவறும்பட்சத்தில விதை வினியோகம் செய்தவர் மீது விதைகள் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    புதிய விதை விற்பனை உரிமம் பெற விண்ணப்பம் செய்வோர் இணையதளம் வாயிலாகவும், ஈரோடு, விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவும் உரிய ஆவணங்களை கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×