குறுவை பட்டத்துக்கு தேவையான விதை நெல் மானியத்தில் வினியோகம்

விதை நெல் திருவையாறு வேளாண்மை விற்பனை மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 50 சதவீத மானியத்தில் பெற்று நாற்று விட்டு நடவு பணியை மேற்கொள்ள வேண்டும்.
குறுவை பட்டத்துக்கு தேவையான விதை நெல் மானியத்தில் வினியோகம்
Published on

தஞ்சாவூர்:

வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சினேகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:-

குறுவை, சாகுபடிக்கு நாளை மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே நடப்பு குறுவை, பட்டத்திற்கு தேவையான விதை நெல் திருவையாறு வேளாண்மை விற்பனை மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கால தாமதம் இல்லாமல் விதை நெல்லை 50 சதவீத மானியத்தில் பெற்று நாற்று விட்டு நடவு பணியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மண்வெட்டி, கடப்பாரை, இருப்புசட்டி, கதிர் அரி வாள், களைகொத்து ஆகியவை 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com