search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sashti Viradham"

    • கையில் கரும்பேந்திய கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.
    • அருணகிரிநாதருக்கு அருளிய முருகனை திருச்சி, வயலூரில் காணலாம்.

    1. சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தில் சிங்காரவேலவனாக மயில் மீதமர்ந்த முருகனை தனித்தனியே யானைகள் மீது அமர்ந்த தேவியருடன் தரிசிக்கலாம்.

    2.கையில் கரும்பேந்திய கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.

    3. அருணகிரிநாதருக்கு அருளிய முருகனை திருச்சி, வயலூரில் காணலாம்.

    4. கோவை கிணத்துக்கடவு எனும் கனககிரியில் உள்ள பொன்மலையில் தரிசனம் தரும் முருகனை,

    பார்வை இழந்த அடியவர் ஒருவர் வழிக்குத்துணை உன் மென்மலர்ப் பாதங்கள் என திடமாக நம்ப,

    அதிசயமாக அந்த அடியவர்க்கு பார்வையை மீட்டுத்தந்தவர் இந்த முருகன்.

    5. பன்னிரண்டு கரங்களோடு போர்த்தளபதி கோலத்தில், தம்பதி சமேதராகவும்,

    முருகனை பல்லடம் உடுமலைப்பேட்டை பாதையில் உள்ள தென்சேரிகிரி தலத்தில் தரிசிக்கலாம்.

    6. நாகை, தில்லையடிக்கருகில் உள்ள திருவிடைக்கழி தலத்தில் குரு சண்டிகேஸ்வரரோடு அருள்கிறார் முருகப்பொருமான்.

    7. சென்னை பாரிமுனையில் கந்த கோட்டத்தில் செல்வமுத்துக்குமார சுவாமியாக முருகன் தரிசனம் தருகிறார்.

    8. கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில் வழக்கத்துக்கு மாறாக

    இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது முருகன் அமர்ந்துள்ளார்.

    9. திருவாரூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள எண்கண் தலத்தில் எட்டுக்குடி மற்றும் சிக்கல் தலங்களில் உள்ள அதே தோற்றத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

    10. தென்காசிக்கு 6 கி.மீ தொலைவில் உள்ள ஆய்க்குடியில் மழலைவரம் வேண்டுவோர்க்கு

    படிப்பாயசம் பிரார்த்தனை மூலம் அருளும் குழந்தை வடிவ பாலமுருகனை காணலாம்.

    11. கல்லால் செதுக்கப்பட்ட வேலை தன் கரத்தில் ஏந்தி செங்கோடன், செங்கோட்டையன் எனும் பெயர்களில்

    முருகப்பெருமான் திருச்செங்கோடு தலத்தில் காட்சி தருகிறார்.

    12. பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம்.

    கோலை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள இத்தலத்தில் நான்முகன் அடைப்பட்ட இரும்பு சிறையும் உள்ளது.

    13. கோவைக்கு அருகில் உள்ள அனுவாவியில் சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்ற அனுமனின் தாகத்தை தீர்த்த அழகு முருகனை தரிசிக்கலாம்.

    14. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாக செயல்படுவதை உணர்த்திய முருகனை

    வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் நெல்லை மாவட்டம் இலஞ்சியில் தரிசிக்கலாம்.

    15. காஞ்சிபுரத்தில் குமரக்கோட்டம் ஆலயத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற திகடச் சக்கர எனும் முதல் அடி எடுத்து கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.

    16. விராலிமலையில் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்கிறார்.

    17. குமரி மாவட்டம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள குமார கோவிலில் வள்ளியுடன் முருகன் கருவறையில் வீற்றிருக்கிறார்.

    18. பக்தர்கள் கனவில் வந்து தன் ஆலயத்திலுள்ள கண்ணாடிப் பெட்டியில் ஏதேனும் பொருளை வைக்க சொல்லி

    உத்தரவிடும் முருகனை காங்கேயத்தில் தரிசிக்கலாம்.

    அந்தப்பொருள் சம்பந்தமாகவே அவ்வருட நிகழ்வுகள் நடப்பது அற்புதம்.

    19. தென்காசி, திருமலைக்கேணி குமாரசுவாமி ஆலயத்தில் வஜ்ராயுதம் ஏந்திய முருகனை 645 படிக்கட்டுகள் கொண்ட மலையில் ஏரி தரிசிக்கலாம்.

    20. மாமல்லபுரம் கல்பாக்கம் பாதையில், திருப்போரூரில் பனைமரத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக முருகனை தரிசிக்கலாம்.

    சிதம்பரசுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரம் இத்தலத்தில் முருகனுக்கு சமமாக போற்றப்படுகிறது.

    • பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும்.
    • கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும்.

    ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும்.

    பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும்.

    கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம், ஜெபம் செய்தல் வேண்டும்.

    இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும்.

    எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.

    • அந்தக் குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளைப் பறித்து இறைவன் மீது வீசிக்கொண்டே இருந்தது.
    • அதைக்கண்ட பார்வதி தேவி சற்று கோபத்துடன் அந்த குரங்கைப் பார்த்தாள்.

    கந்த சஷ்டி விரதத்தை நியதியாக அனுஷ்டித்து எல்லா நலன்களும் பெற்ற வல்லாளன் முசுகுந்தன்?

    இந்த முசுகுந்தன் யார் தெரியுமா? முசுகுந்தனின் கதையிலேயே இன்னொரு ஆன்மீக விளக்கமும் அடங்கியுள்ளது.

    திருக்கயிலாய மலையில் ஒரு சமயம் சிவபெருமான் ஒரு வில்வ மரத்தின் அடியில் அமர்ந்து

    சிவகாமசுந்தரிக்கு சிவ ஆகமங்களை உபதேசித்துக்கொண்டிருந்தார்.

    அந்தச் சமயத்தில் அந்த வில்வமரத்தின் மீதிருந்த ஒரு குரங்கு வில்வ இலைகளைப் பறித்து இறைவன் மீது வீசிக்கொண்டிருந்தது.

    சிவபெருமான் அதனைப் பொருட்படுத்தாமல் சிவாகமங்களை உபதேசித்துக் கொண்டிருந்தார்.

    ஆனால் அந்தக் குரங்கு விளையாட்டாக மேலும் மேலும் வில்வ இலைகளைப் பறித்து இறைவன் மீது வீசிக்கொண்டே இருந்தது.

    அதைக்கண்ட பார்வதி தேவி சற்று கோபத்துடன் அந்த குரங்கைப் பார்த்தாள்.

    தேவியின் சீற்றத்தை புரிந்துகொண்ட பரமேசுவரன், பார்வதியை நோக்கி 'பார்வதி ஏன் சினம் கொள்கிறாய்?

    எல்லா உயிர்களும் நம் குழந்தைகள்தானே, அவற்றின் செய்கைக்காக நாம் கோபம் கொள்ளலாமா?

    நும் குழந்தையான இக்குரங்கு நம்மீது இட்டது வில்வம் தானே, பரவாயில்லை' என்று சினம் தனியச் சொன்னார்.

    அம்பிகையின் திருப்பார்வை பெற்றதனால் அஞ்ஞானம் நீங்கப்பெற்று மெய்ஞானம் பெற்ற குரங்கு

    மரத்திலிருந்து கீழே இறங்கி அம்மையப்பனின் திருவடி தொழுது,

    'அடியேன் அறியாது செய்த பிழையை பொறுத்தருள வேண்டும்' என்று வேண்டி நின்றது.

    அதைக்கேட்ட ஈசன், 'குரங்கே! குவலை வேண்டாம், நீ என்மீது இட்டது வில்வம்தானே,

    நீ வேடிக்கையாக இட்டபோதும் இனி என்னை வில்வத்தால் அர்ச்சித்தவர் என்னருள் பெற்று எல்லா நலன்களும் பெறுவர்.

    ஆதன்படி நீ சிவ புண்ணியம் செய்ததால் நீ மண்ணுலகில் அரசனாகப் பிறந்து சிறந்த செல்வ நலன்களை அனுபவிப்பாயாக' என்று வரமளித்தார்.

    ஆனால் அக்குரங்கு, 'எந்தையே! வேண்டாம் நான் இக்கயிலையில் ஒரு புழுவாக வேண்டுமானாலும் வாழ்கிறேன், மானிடப் பிறவி மட்டும் வேண்டாம்' என்று அழுது புலம்பியது.

    அதற்கு சிவபெருமான், 'வானரமே! செய்த துன்பங்களை நுகர்கிற இடம் மண்ணுலகே ஆகும்.

    ஆகவே நீ உயர்ந்த குலமான அரிச்சந்திர குலத்தில் பிறந்து சக்கரவர்த்தியாக வாழ்வாயாக!.

    அங்ஙனம் வாழும்போது எமது குமாரனான முருகனின் பக்தனாக வாழ்ந்து

    கந்தசஷ்டி விரதங்களை முறையாக அனுஷ்டித்து மேலும் புண்ணியம் ஈட்டி கயிலைக்கு வருவாயாக!' என்று அருளினார்.

    அதன்படி முசுகுந்தன் என்ற அரசனாகப் பிறந்து கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து

    முருக பக்தியில் சிறந்து விளங்கியதோடு சஷ்டி விரதத்தையும் கடை பிடித்து கயிலை பெருவாழ்வு பெற்றான்.

    குரங்கு அறியாமையால் இறைவன்மீது வில்வ இலைகளை வீசியதை மன்னித்ததோடு இறைவன் அன்று முதல்

    வில்வ அர்ச்சனையை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டான்.

    அதனாலேயே இன்றும் சிவாலயங்களில் வில்வத்தால் அர்ச்சனை செய்கிறோம்.

    • பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும்.
    • பாராயணம் புரிதல் வேண்டும் தியானம், ஜெபம் செய்தல் வேண்டும்.

    ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டிவரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து

    தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து

    அர்ச்சித்து வழிபட வேண்டும்.

    பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும்.

    கந்தனின் சரித்திரங்களைக் கேட்க வேண்டும்.

    பாராயணம் புரிதல் வேண்டும் தியானம், ஜெபம் செய்தல் வேண்டும்.

    இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும்.

    எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.

    ×