search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rouhani"

    உலக பயங்கரவாதத்தின் தலைமையாக விளங்கும் அமெரிக்கா எங்கள் நாட்டு ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்துவதா? என ஈரான் அதிபர் ரவுஹானி சீறியுள்ளார். #UStheleader #Worldterrorism #Rouhani #Trump #IRG
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.
     
    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுகாக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது.



    இதற்கிடையில், ஈரான் நாட்டின் ராணுவமான புரட்சிகர பாதுகாப்பு படையை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஈரான் மக்களிடையே தொலைக்காட்சி மூலம் இன்று உரையாற்றிய ரவுஹானி, ‘எங்கள் நாட்டின் புரட்சிகர படைகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்த நீங்கள் (அமெரிக்கா) யார்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    எங்கள் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை கருவியாக பயன்படுத்தும் நீங்கள்தான் உலக பயங்கரவாதத்தின் தலைமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். #UStheleader #Worldterrorism #Rouhani #Trump #IRG
    ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி சூளுரைத்துள்ளார். #Iransanctions #USsanctions #Rouhani
    டெஹ்ரான்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

    மேலும், ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.  அமெரிக்காவின் பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர திணித்துள்ளார். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


    இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இன்று சூளுரைத்துள்ளார்.

    ஈரான் மக்களிடையே இன்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ரவுகானி, 'சர்வதேச நெறிமுறைகளை மீறி எங்கள் மீது உங்களால் (அமெரிக்கா) திணிக்கப்பட்டுள்ள சட்டமீறலான அத்தனை தடைகளையும் தகர்த்து நாங்கள் பெருமையுடன் முன்னேறி வருவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டார். #Iransanctions #USsanctions #Rouhani
    ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால் ஏற்பட்டுள்ள தற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா, தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது. #TrumpmeetRouhani #TrumpRouhani
    டெஹ்ரான் :

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    இதனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீப காலமாக வார்த்தைப் போர் அதிகரித்து ஒருவித மோதல் போக்கு உருவாகியுள்ளது.

    இதற்கிடையே, ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியுடன் எவ்வித முன்நிபந்தனைகளும் இல்லாமல் அமைதி பேச்சுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா வந்துள்ள இத்தாலி பிரதமர் கியுசெப்பு கோன்ட்டேவுடன் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது, ஈரான் அதிபர் ரவுகானியை சந்திக்கும் எண்ணம் உள்ளதா? என்னும் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் சந்திப்புகளில் நம்பிக்கை கொண்டவன். ஈரான் அதிபர் என்னை சந்திக்க விரும்பினால் நான் நிச்சயமாக சந்திப்பேன்.

    இதற்கு ஈரான் தயாரா? என்பது எனக்கு தெரியவில்லை. அணு ஒப்பந்தத்தில் இருந்து நான் விலகியதும் அவர்கள் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளனர். எனவே, அவர்கள் சந்திப்புக்கு முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். அவர்கள் எப்போது விரும்பினாலும் நான் சந்தித்துப் பேச தயாராகவே இருக்கிறேன்.

    இந்நிலையில், ரவுகானியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள ட்ரம்பின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜரிப், தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.



    ’ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வருடங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், ஈரானுடனான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதாலேயே இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

    எனவே, தற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும். மிரட்டல்கள் மற்றும் பொருளாதார தடைகள் வேலைக்கு ஆகாது. எனவே, மதிக்க முயற்சி செய்யுங்கள்’ என முகமது ஜாவத் ஜரிப் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அமெரிக்கா நம்பிக்கைக்குறிய நாடு அல்ல. அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய அந்த நாட்டை எப்படி நம்ப முடியும்?.

    அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் போது ஏற்கனவே ஏற்பட்ட மோசமான அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும் போது டொனால்ட் ரவுகானியை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ள கருத்தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TrumpmeetRouhani #TrumpRouhani
    ஈரானிடம் இருந்து பிற நாடுகள் பெட்ரோல் கொள்முதல் செய்ய அமெரிக்கா தடை விதித்ததற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    டெஹ்ரான் :

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

    ஆனால், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்தது.

    இந்நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதிக்குள் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்து இருந்தது.

     ஈரானிடம் பெட்ரோல் கொள்முதல் செய்ய தடை விதித்தால், வளைகுடா முழுதும் பெட்ரோல் கொள்முதல் செய்யப்படுவது பாதிப்பை ஏற்படுத்தும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

    அரசு முறை பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள ஹசன் ரௌகானி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஈரானிடம் இருந்து பிற நாடுகள் பெட்ரோல் கொள்முதல் செய்வதை முற்றிலும் நிறுத்த அமெரிக்க முடிவு செய்துள்ளது. ஆனால், அவர்கள் கூறியதன் அர்த்தம் அவர்களுக்கே புரியவில்லை. ஈரான் நாட்டின் பெட்ரோல் கொள்முதல் தடை செய்யப்பட்டால் வளைகுடா நாடுகளின் பெட்ரோல் கொள்முதலிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்துள்ளார். #Rouhani #pressurefromTrump
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஈரான் நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஹஸன் ரவுகானி, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் அந்நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். #Rouhani #pressurefromTrump
    அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் இதரநாடுகளின் துணையுடன் நாங்கள் தொடர்ந்து நீடிப்போம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இன்று அறிவித்துள்ளார். #Rouhani #nuclearaccord
    டெஹ்ரான்:

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. 

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும். 

    இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஈரான் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால், ரஷியா, சீனா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில மேற்கத்திய நாடுகளும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற கூடாது என வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், இன்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை சந்தித்த ரவுகானி, இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது தர்மநெறிகளுக்கு எதிரான செயல். அமெரிக்கா விலகினாலும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள ஐந்து நாடுகளின் துணையுடன் நாங்கள் தொடர்ந்து நீடிப்போம் என குறிப்பிட்டுள்ளார். #Rouhani #nuclearaccord
    ×