என் மலர்

  நீங்கள் தேடியது "Rogers Cup"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ‘இளம் புயல்’ சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். #RogersCup #Tsitsipas #RafaelNadal #SimonaHalep
  டோராண்டோ:

  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-6 (3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கரென் காச்சனோவை (ரஷியா) தோற்கடித்தார்.

  மற்றொரு அரைஇறுதியில் 27-ம் நிலை வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), 6-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். 2 மணி 47 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சிட்சிபாஸ் 6-7 (4), 6-4, 7-6 (7) என்ற செட் கணக்கில் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். டாப்-10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை சிட்சிபாஸ் தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்திருக்கிறார். இதன் மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரில் டாப்-10 இடத்தில் உள்ள 4 வீரர்களை சாய்த்த இளம் வீரர் என்ற சிறப்பை சிட்சிபாஸ் பெற்றார். அவர் முந்தைய ரவுண்டுகளில் முன்னணி வீரர்கள் டொமினிக் திம், விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரை விரட்டியடித்தார்.  சிட்சிபாசுக்கு நேற்று 20-வது வயது பிறந்தது. இந்த வெற்றிகளை நம்ப முடியவில்லை என்றும், ஒரு தொடரில் இதைவிட பெரியதாக சாதிக்க முடியாது என்றும் மகிழ்ச்சி ததும்ப சிட்சிபாஸ் கூறினார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் முதல் 15 இடங்களுக்குள் முன்னேறுகிறார்.

  முதல் சர்வதேச பட்டத்துக்கு குறி வைத்துள்ள சிட்சிபாஸ் இறுதி ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரபெல் நடாலுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.  பெண்கள் ஒற்றையரில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியையும், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் ஸ்விடோலினாவையும் (உக்ரைன்) புரட்டியெடுத்தனர்.

  மகுடத்துக்கான இறுதிசுற்றில் ஹாலெப், ஸ்டீபன்ஸ் மோதுகிறார்கள். அண்மையில் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ், ஹாலெப்பிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோஜர்ஸ் டென்னிஸ் தொடரின் கால்இறுதி ஆட்டத்தில் ரபெல் நடால் ஆறாவது வரிசையில் இருக்கும் சிலிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். #RogersCup #RafaelNadal
  ரோஜர்ஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டி கனடாவில் நடைபெற்று வருகிறது. இதன் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆறாவது வரிசையில் இருக்கும் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். இதில் நடால் 2-6, 6-4, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் கரென் கஜோனோவ் (ரஷியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), ஸ்டெபின்ஸ் (கிரீஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர். #RogersCup #RafaelNadal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை கிரிஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளைஞரான ஸ்டீபனோஸ் வீழ்த்தினார். #Djokovic
  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கனடாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமொன்றில் 13 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கிரீ்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயதே ஆன ஸ்டீபனோஸ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார்.

  இதில் ஸ்டீபனோஸ் ஜோகோவிச்சிற்கு கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார்.

  2-வது செட்டில் ஜோகோவிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் ஸ்டீபனோஸ் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் 2-வது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஜோகோவிச் 7(7)- 6(5) என கைப்பற்றினார்.  வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை ஸ்டீபனோஸ் 6-3 என ஜோகோவிச்சை வீழ்த்தினார். இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்டீபனோஸ் முன்னேறியுள்ளார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் நடால், ஹெலப் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #nadal #simonahalep

  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-ம் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நடால் (ஸ்பெயின்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) மோதினர். இதில் நடால் 7-5, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரின் சிலிக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஸ்சலார்ட்ஸ் மேனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை கிரிஸ் இளம்வீரர் டிசிடிசிபாஸ் 6-3, 6-7 (5-7), 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார்.  இதேபோல் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), ஸ்வெரேவ் (ஜெர்மனி), ராபின் ஹாஸ் (டென்மார்க்), கரேன் கசனோஸ் (ரஷியா) கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹெலப் (ருமேனியா) 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.  மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ‌ஷரபோவா 3-6, 2-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் கார்சியாவிடம் தோற்று வெளியேறினார்.#nadal #simonahalep
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ்க்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. #RogersCup #Serena
  டென்னிஸ் அரங்கில் கொடிகட்டி பறந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பரிடம் 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

  என்றாலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் குழந்தை பெற்ற பிறகு, சுமார் 9 மாதத்திற்குள் டென்னிஸ் அரங்கிற்கு திரும்பி, இறுதிப் போட்டி வரை முன்னேறியதை அனைவரும் பாராட்டினார்கள்.  அடுத்து அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். விம்பிள்டன் வெற்றி அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஓபனுக்கு தயாராகும் வகையில் கனடாவின் மான்ட்ரியலில் ஆகஸ்ட் 3-ந்தேதி தொடங்கும் ரோஜர்ஸ் கோப்பை தொடரில் விளையாட முடிவு செய்தார்.

  கடந்த நான்கு வருடங்களாக ரோஜர்ஸ் கோப்பையில் விளையாடாத செரீனாவிற்கு, ஒருங்கிணைப்பாளர்கள் வைல்டு கார்டு வழங்கியுள்ளனர்.
  ×