என் மலர்

  செய்திகள்

  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்- செரீனா வில்லியம்ஸ்க்கு வைல்டு கார்டு
  X

  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்- செரீனா வில்லியம்ஸ்க்கு வைல்டு கார்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ்க்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. #RogersCup #Serena
  டென்னிஸ் அரங்கில் கொடிகட்டி பறந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பரிடம் 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

  என்றாலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் குழந்தை பெற்ற பிறகு, சுமார் 9 மாதத்திற்குள் டென்னிஸ் அரங்கிற்கு திரும்பி, இறுதிப் போட்டி வரை முன்னேறியதை அனைவரும் பாராட்டினார்கள்.  அடுத்து அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். விம்பிள்டன் வெற்றி அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஓபனுக்கு தயாராகும் வகையில் கனடாவின் மான்ட்ரியலில் ஆகஸ்ட் 3-ந்தேதி தொடங்கும் ரோஜர்ஸ் கோப்பை தொடரில் விளையாட முடிவு செய்தார்.

  கடந்த நான்கு வருடங்களாக ரோஜர்ஸ் கோப்பையில் விளையாடாத செரீனாவிற்கு, ஒருங்கிணைப்பாளர்கள் வைல்டு கார்டு வழங்கியுள்ளனர்.
  Next Story
  ×