என் மலர்

  செய்திகள்

  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்- கால் இறுதியில் நடால், ஹெலப்
  X

  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்- கால் இறுதியில் நடால், ஹெலப்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் நடால், ஹெலப் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #nadal #simonahalep

  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-ம் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நடால் (ஸ்பெயின்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) மோதினர். இதில் நடால் 7-5, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரின் சிலிக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஸ்சலார்ட்ஸ் மேனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை கிரிஸ் இளம்வீரர் டிசிடிசிபாஸ் 6-3, 6-7 (5-7), 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார்.  இதேபோல் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), ஸ்வெரேவ் (ஜெர்மனி), ராபின் ஹாஸ் (டென்மார்க்), கரேன் கசனோஸ் (ரஷியா) கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹெலப் (ருமேனியா) 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.  மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ‌ஷரபோவா 3-6, 2-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் கார்சியாவிடம் தோற்று வெளியேறினார்.#nadal #simonahalep
  Next Story
  ×