என் மலர்

  செய்திகள்

  13 கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜோகோவிச்சை வீழ்த்தினார் 19 வயது இளைஞன்
  X

  13 கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜோகோவிச்சை வீழ்த்தினார் 19 வயது இளைஞன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை கிரிஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளைஞரான ஸ்டீபனோஸ் வீழ்த்தினார். #Djokovic
  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கனடாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமொன்றில் 13 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கிரீ்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயதே ஆன ஸ்டீபனோஸ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார்.

  இதில் ஸ்டீபனோஸ் ஜோகோவிச்சிற்கு கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார்.

  2-வது செட்டில் ஜோகோவிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் ஸ்டீபனோஸ் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் 2-வது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஜோகோவிச் 7(7)- 6(5) என கைப்பற்றினார்.  வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை ஸ்டீபனோஸ் 6-3 என ஜோகோவிச்சை வீழ்த்தினார். இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்டீபனோஸ் முன்னேறியுள்ளார். 
  Next Story
  ×