search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Riot prevention"

    • ஒத்திகை பயிற்சி போலீஸ் கமிஷனர் தலைமையில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
    • 100 போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் 100 போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தடுப்பு உபகரணங்களை நேரடியாக ஆய்வு செய்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். இதில் போலீஸ் துணை கமிஷனர்கள் அபினவ்குமார், வனிதா, ஆயுதப்படை கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கலவரத்தடுப்புக்கு புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #EdappadiPalanisamy
    சென்னை:

    சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்பு துறை மானியக்கோரிக்கையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    30 வயதிற்கு உட்பட்ட காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு முழு உடல் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும். ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கான நல வாரியம் உருவாக்கப்படும். காவல்துறையில் புதிய பதவிகள் ரூ.13.51 கோடி செலவில் உருவாக்கப்படும்.



    அதன்படி, ரூ.44.71 லட்சம் செலவில், காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் (அலுவலக கணினிமயமாக்கல்) பதவி ஒன்று புதியதாக தோற்றுவிக்கப்படும். ரூ.12.02 கோடி ரூபாய் செலவில் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு புதியதாக 3 கூடுதல் ஆயுதப்படை பிரிவுகள் உருவாக்கப்படும். ரூ.1.04 கோடி ரூபாய் செலவில் உயர்நீதி மன்ற மதுரை கிளைக்கு புதியதாக உருவாக்கப்படவுள்ள 3 கூடுதல் ஆயுதப்படை பிரிவுகளுக்கு அமைச்சுப்பணியாளர்கள் உருவாக்கப்படும்.

    ரூ.119.73 கோடி செலவில் 1,397 புதிய காவல் வாகனங்கள் வாங்கப்படும். அதன்படி, ரூ.2.20 கோடி செலவில் 10 கலவர தடுப்பு வஜ்ரா வாகனங்கள் காவல்துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும். ரூ.1.76 கோடி செலவில், 8 கலவர தடுப்பு வஜ்ரா (தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்) வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் காவல் துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும்.

    ரூ.6.50 கோடி செலவில் 10 கலவர தடுப்பு வருண் வாகனங்கள் காவல்துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும். ரூ.3.25 கோடி செலவில் 5 கலவர தடுப்பு வருண் வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப் படும்.

    பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கலவரங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுண்ணறிவுப்பிரிவு மூலம் கூட்டம் கூடுவதை அறிந்து அதனை கண்காணிக்கும் விதமாக மென்பொருள் திட்டம் ஒன்று, ரூ.76 லட்சம் செலவில் சென்னையில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப கழகம் மூலம் உருவாக்கப்படும்.

    இத்தொகை முதல் வருடத்திற்கு தொடரா செலவினமாக வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு வருடந்தோறும் ரூ.56 லட்சம் செலவில் செலவினமாக வழங்கப்படும். ரூ.3 கோடி செலவில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறை நெரிசலை ஒழுங்குபடுத்த ரூ.3 கோடியில் 2 ஆயிரம் நகரும் தடுப்புகள் வாங்கப்படும்.

    ரூ.14.25 கோடி செலவில் காவல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க 475 காவல் நிலையங்களுக்கு இளையதளத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராவுடன் கூடிய தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும். ரூ.3.15 கோடியில் 105 காவல் நிலையங்களுக்கு கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும். ரூ.3.87 கோடியில் புல காவலிற்கான 129 மொபைல் உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும்.

    ரூ.100 கோடி மதிப்பில் கழிவு செய்யப்பட்ட (பழைய) பல வகை வாகனங்களுக்கு பதிலாக 1,340 புதிய வாகனங்கள் வாங்கப்படும். ரூ.6.02 கோடி செலவில் 6 காவல் ஆணையரகங்கள், சென்னை நகரத்தில் உள்ள 4 சட்டம் மற்றும் ஒழுங்கு மண்டலங்கள் ஆகியவற்றின் உபயோகத்திற்காக 24 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வாங்கப்படும்.கடலோர பாதுகாப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளரின் தலைமையிடம் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு மாற்றப்படும்.

    ரூ.5.48 கோடி செலவில் திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தை பிரித்து திருமுருகன் பூண்டியில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும். இந்த காவல் நிலையத்திற்கு ரூ.1 கோடியில் கட்டிடங்கள் கட்டப்படும்.

    ரூ.3.31 கோடி செலவில் அனைத்து மாவட்ட மற்றும் சிறப்பு படைப்பிரிவுகளில் காவல் வாத்தியக்குழுக்கள் உருவாக்கப்படும். ரூ.4.20 கோடி செலவில் காவலர்களின் பயிற்சிக்காக 19 வகையான சிறப்பு படைகலன்கள் வாங்கப்படும். ரூ.50 லட்சத்தில் நேரியல் அல்லாத சந்தி கண்டுபிடிக்கும் கருவி 5 வாங்கப்படும். ரூ.45 லட்சம் செலவில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் 3 கருவிகள் வாங்கப்படும். ரூ.12 லட்சம் செலவில் ஆழமாக புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் 4 கருவிகள் வாங்கப்படும். ரூ.34 லட்சம் செலவில் ஊடுகதிர் மூலம் கண்டறியும் 2 கருவிகள் வாங்கப்படும். ரூ.1.50 லட்சத்தில் கையடக்க வாயிற்படி உலோக கண்டுபிடிப்பிற்கான 3 கருவிகள் வாங்கப்படும்.

    ரூ.25 லட்சத்தில் வாயிற்படி உலோக கண்டுப்பிடிப்பிற்கான 5 கருவிகள் வாங்கப்படும். ரூ.45 ஆயிரம் செலவில் 5 நீட்டிப்பு கண்ணாடிகள் வாங்கப்படும். ரூ3.15 லட்சம் செலவில் 35 புரோடர் கருவிகள் வழங்கப்படும். 98 ஆயிரம் செலவில் வாகனத்தின் கீழ் தேடும் 14 கண்ணாடிகள் வாங்கப்படும். ரூ.4.95 லட்சம் செலவில் 55 தேடுதல் பணிக்கான விளக்குகள் வாங்கப்படும். ரூ.3 லட்சம் செலவில் 2 பகல் நேர கண்காணிப்பு தொலைநோக்கு கருவிகள் வாங்கப்படும். ரூ.15.60 லட்சத்தில் 2 இரவு நேர கண்காணிப்பு தொலைநோக்கு கருவிகள் வாங்கப்படும்.

    ரூ.5.05 கோடி செலவில் பணித்திறன் மேம்பாட்டிற்காக 250 காவல் நிலையங்களுக்கென அடிப்படை சாதனங்கள் வாங்கப்படும். ரூ.12.20 கோடியில் அதிவிரைவு படைக்கு 14 வகையான சாதனங்கள் வாங்கப்படும். ரூ.55 லட்சத்தில் 100 எண்ம முறையிலான 800 மெகா ஹெர்ட்ஸ் கையடக்க சாதனங்கள் வாங்கப்படும். ரூ.80 லட்சம் செலவில் தமிழ்நாடு காவல் அகாடமிக்கு அனைத்து வகையான தடய அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வாங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×