என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rakul Preet"

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், 2 படங்களில் இருந்து படக்குழுவினர் நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #RakulPreetSingh
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சமீபத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த தேவ் படம் திரைக்கு வந்தது. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடித்த என்.ஜி.கே படம் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 2 இந்தி படங்களும் கைவசம் உள்ளன.

    சமீப காலமாக ரகுல் ப்ரீத் சிங் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன. இந்த நிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான 2 படங்களில் இருந்து அவரை நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் விஷ்ணு விஷால்-அமலாபால் ஜோடியாக நடித்து வெற்றிபெற்ற ராட்சசன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர்.



    இதில் பெல்லம் கொண்டா சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் இப்போது திடீரென்று அவரை நீக்கி விட்டு ராஷிகன்னாவிடம் பேசி வருகிறார்கள். அதிக சம்பளம் கேட்டதால் ரகுல் பிரீத் சிங்கை நீக்கியதாக பேசப்படுகிறது.

    இதுபோல் நாக சைதன்யா நடிக்கும் வெங்கி மாமா படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் ரகுல் ப்ரீத் சிங்கை ஒப்பந்தம் செய்து இருந்தனர். இப்போது அந்த படத்தில் இருந்தும் அவரை நீக்கி விட்டு நபா நடேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
    தமிழில் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் ரகுல் ப்ரீத்சிங், அவருக்கு தலைக்கனம் இருக்க கூடாது என்று கூறியிருக்கிறார். #RakulPreetSingh
    கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் ஜோடி சேர்ந்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத்சிங். இப்போது சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். வருங்கால கணவர் பற்றியும் சினிமா வாழ்க்கை பற்றியும் ரகுல் ப்ரீத்சிங் அளித்த பேட்டி வருமாறு :-

    ‘‘எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். நான் 5.9 அடி உயரம் இருக்கிறேன். அதை விட உயரமானவராக என்னை மணப்பவர் இருக்க வேண்டும். அவருக்கு தலைக்கனம் இருக்க கூடாது. எல்லோரையும் மதிக்க வேண்டும். நேரத்தின் மதிப்பு தெரிந்து நடக்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். 

    இப்படி நான் பேசுவதால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன் என்று அர்த்தம் இல்லை. இன்னும் அது பற்றி சிந்திக்கவில்லை. இப்போது எனது கவனமெல்லாம் சினிமாவில்தான். நிறைய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயர் எடுப்பதுதான் முக்கியம். அதற்காக உழைக்கிறேன். 



    சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வருவேன் என்று சிந்திக்கவில்லை. நான் ராணுவ குடும்பத்தில் இருந்து வந்ததால் சிறுவயதிலேயே உடற்பயிற்சிகளிலும் ஈடுபாடு இருந்தது. கராத்தே கற்று இருக்கிறேன். இப்போது 3 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் ஆரம்பித்து இருக்கிறேன். சினிமாவில் நடிப்பதோடு இப்படி சொந்தமாக ஒரு தொழில் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தமிழில், கார்த்தி, சூர்யா, படங்களில் பிசியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிக் காண்பித்திருக்கிறார். #RakulPreetSingh
    தமிழ் கைகொடுக்காததால் தெலுங்குக்கு சென்று முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் திசிங்கை மீண்டும் தமிழ் கைகொடுத்து வரவேற்றுள்ளது.

    ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களை தொடர்ந்து சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் தேவ் படங்களில் நடித்து வருகிறார். ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்புக்காக உக்ரைன் சென்றிருந்தபோது, ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தன் பெற்றோரை அழைத்துச்சென்று ஊர் சுற்றிக் காட்டியிருக்கிறார் ரகுல்ப்ரீத் சிங்.



    இதற்கு முன்னர், ஒரு தெலுங்கு படத்துக்காக அங்கு சென்றிருந்ததால், அத்தனை இடங்களும் ரகுலுக்கு நன்றாக தெரியுமாம். அதனால் இந்த முறை படப்பிடிப்புக்கு பெற்றோரையும் திட்டமிட்டே கூட்டி சென்று இருக்கிறார்.
    தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், ஒரு நாளைக்கு 2 மணி நேரம் ஜிம்மில் ஒர்க் செய்து வருகிறார். #RakulPreetSingh
    தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் ‘தேவ்’, சூர்யாவுடன் ‘என் ஜி கே’, சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

    மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார். 



    இதற்காக ஜிம்மிலேயே அதிக நேரம் செலவழிக்கிறார். ஒரு நாளைக்கு குறைந்தது 2 மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபடும் ரகுல் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது உடற்பயிற்சி படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
    தமிழில் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கில் முன்னணி நடிகரான ராம் சரணுக்காக திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். #RakulPreetSingh
    தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். கார்த்தியுடன் இவர் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் வெற்றி பெற்றதால், தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    தற்போது முன்னணி கதாநாயகர்களான சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் யாருமே எதிர்பாராத நிலையில் தெலுங்கில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். 



    பொயபட்டி சீனு இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். கதாநாயகியாக பிசியாக இருந்தாலும் ராம்சரணின் நட்புக்கு இதை ஒப்புக்கொண்டுள்ளார்.
    ×