என் மலர்
நீங்கள் தேடியது "Public Sector Banks"
- ஏடிஎம்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.
- பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்" என்று தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்.
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிற வங்கிகள் இன்று தங்கள் ஏடிஎம்கள் முழுமையாக செயல்படுவதாகவும், நன்கு செயல்படுவதாகவும், டிஜிட்டல் சேவைகள் சீராக இயங்குவதாகவும் தெரிவித்துள்ளன.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் வரும் நாட்களில் ஏடிஎம்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏடிஎம் உள்பட அனைத்து டிஜிட்டல் சேவைகளும் சீராக இயங்குவதாக எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் தெரிவித்துள்ளன.
"எங்கள் அனைத்து ஏடிஎம்கள், சிடிஎம்கள்/ஏடிடபிள்யூஎம்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் முழுமையாக செயல்படுகின்றன மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன" என்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா," பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்" என்று தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியது.
இதே போன்ற செய்திகளை பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளும் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி தனது எக்ஸ் தள பக்கத்தில்,"எங்கள் அனைத்து டிஜிட்டல் சேவைகளும் சீராக இயங்குகின்றன. உங்கள் வீட்டில் இருந்தபடியே தடையற்ற வங்கி அனுபவத்தை பெறலாம்," என்று குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சைபர் பாதுகாப்பு தயார்நிலை குறித்த மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவார் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பெண்களுக்காக தனிப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்களையும் அளிக்கிறது.
- குறுகிய காலத்திலேயே அதிக வட்டியை அரசு வழங்குகிறது.
குழந்தைகள், முதியவர்களுக்கு என்று பல்வேறு சேமிப்பு திட்டங்களை தபால் அலுவலகம் வழங்குகிறது.
அதேபோல பெண்களுக்காக தனிப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்களையும் அளிக்கிறது. அவற்றில். `மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்' திட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
பெண்களுக்காக சிறப்பாக தொடங்கப்பட்ட திட்டமான இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு குறுகிய காலத்திலேயே அதிக வட்டியை அரசு வழங்குகிறது. அதாவது 7.5 சதவீதம் வட்டி தரப்படுகிறது.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள் ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. குறுகிய காலத்திலேயே இந்த திட்டம் மிகவும் பிரபலமாகி விட்டது. இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
பெண்கள் சுயமாக வாழ்க்கை நடத்த உதவும் நோக்கில் இந்த திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு கூடுதல் வட்டி அளிப்பதோடு, வருமான வரி பிரிவு 80 சி-யின்படி வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. மற்றொரு முக்கிய அம்சம், இதில் 10 வயது மற்றும் அதற்கும் குறைவான பெண் குழந்தைகள் பெயரிலும் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
அடுத்த ஆண்டு (2025) மார்ச் 31-ந்தேதிக்கு முன்போ, அன்றைய தினமோ இந்த திட்டத்தில் பெண்கள் கணக்கை தொடங்கலாம்.
தபால் அலுவலகம் தவிர, அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் 4 தனியார் வங்கிகளிலும் இந்த கணக்கை ஆரம்பிக்கலாம்.
மத்திய மந்திரி பியூஸ் கோயல் டெல்லியில் நேற்று நடந்த 13 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த அவரிடம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததால் பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகைக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பியூஸ் கோயல், “மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது. இதை மீண்டும் உறுதிபட கூறுகிறேன். மத்திய அரசு எப்போதும் பொதுத்துறை வங்கிகளுக்கு துணை நிற்கும். பொதுத்துறை வங்கிகளை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது” என்றார். #PublicMoney #PiyushGoyal #Tamilnews






