என் மலர்
நீங்கள் தேடியது "Digital transactions"
- ஏடிஎம்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.
- பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்" என்று தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்.
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிற வங்கிகள் இன்று தங்கள் ஏடிஎம்கள் முழுமையாக செயல்படுவதாகவும், நன்கு செயல்படுவதாகவும், டிஜிட்டல் சேவைகள் சீராக இயங்குவதாகவும் தெரிவித்துள்ளன.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் வரும் நாட்களில் ஏடிஎம்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏடிஎம் உள்பட அனைத்து டிஜிட்டல் சேவைகளும் சீராக இயங்குவதாக எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் தெரிவித்துள்ளன.
"எங்கள் அனைத்து ஏடிஎம்கள், சிடிஎம்கள்/ஏடிடபிள்யூஎம்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் முழுமையாக செயல்படுகின்றன மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன" என்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா," பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்" என்று தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியது.
இதே போன்ற செய்திகளை பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளும் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி தனது எக்ஸ் தள பக்கத்தில்,"எங்கள் அனைத்து டிஜிட்டல் சேவைகளும் சீராக இயங்குகின்றன. உங்கள் வீட்டில் இருந்தபடியே தடையற்ற வங்கி அனுபவத்தை பெறலாம்," என்று குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சைபர் பாதுகாப்பு தயார்நிலை குறித்த மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவார் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அரசின் நடவடிக்கைகளால் 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
- டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
மக்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கரத் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு பீம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகைத் திட்டத்தை மத்திய அரசு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்துள்ளது.
அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2018-19-ம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 200 சதவீதம் உயர்ந்துள்ளது. 2018-19-ம் நிதியாண்டில் 2,326.02 கோடி என்ற எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன. 2021-22-ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 7,197.68 சதவீதமாக அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் சேவைகளை தடையற்ற முறையில் வழங்க வங்கிகளும் புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ஏற்று செயல்படுத்துகின்றன. பீம் யுபிஐ, யுபிஐ-123, ஆதார் பரிவர்த்தனை பாலம், ஏஇபிஎஸ் போன்ற பல முன்முயற்சிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் மற்றும் வங்கிகளால் செயல்படுத்தப்படுகின்றன என தெரிவித்தார்.






