என் மலர்

  நீங்கள் தேடியது "Pookuzhi festival"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தசரா ஊர்வலத்துடன் தொடங்கியது.
  • பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிகள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  ஆலங்குளம்:

  ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று பூக்குழித் திருவிழா நடைபெற்றது.

  இக்கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தசரா ஊர்வலத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் வீதி உலா வந்தனர்.

  இதையடுத்து சனிக்கிழமை குழந்தைகள் பங்குபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் 1,503 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

  26-ந் தேதி காலை கோமாதா பூஜை, இரவு சாமகால பூஜை ஆகியவை நடைபெற்றது. நேற்று பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, பால்குடம் எடுத்தல் ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிகள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதில் விரதம் இருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்கினி குண்டம் இறங்கினர். ஆலங்குளம் தீயணைப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

  தொடர்ந்து இரவு அம்பாள் சப்பரத்தில் வீதி உலா, சாம பூஜையும் நடைபெற்றது. இன்று சிபு பூஜை, மஞ்சள் நீராட்டு மற்றும் அன்னதானத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

  ஏற்பாடுகளை நிர்வாகப் பொறுப்பாளர் எஸ்.எஸ். ராமசுப்பு மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

  ×