என் மலர்
நீங்கள் தேடியது "Pollachi murder"
- இத்தனை ஆம்பளைங்க நிற்கிறீங்க... யாராவது போய் தடுங்க... என்று ஒரு பெண் கதறும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
- பொதுமக்களில் யாராவது ஒருவர் துணிச்சலுடன் சென்று பாரதியை தடுத்து இருந்தால் பரிதாபமாக ஒரு உயிர் போய் இருக்காது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி(வயது27). பெயிண்டர். இவருடைய மனைவி சுவேதா(26). தனியார் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாரதியும், சுவேதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிரேஷ்(9), கேப்ரியல்(7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். 2 குழந்தைகளுடன் அழகாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சந்தேக புயல் அடிக்க தொடங்கியது.
சுவேதாவின் நடத்தையில் பாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையடுத்து சுவேதா, ஏ.பி.டி. ரோட்டில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை தனது குழந்தைகளை அருகே உள்ள பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து வேலைக்கு புறப்பட்டார்.
பழனியப்பன் வீதியில் சுவேதா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பாரதி அவரை வழிமறித்து, தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சுவேதா மறுக்கவே அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
சுவேதா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் பாரதி விடாமல் பின்தொடர்ந்து சென்று பாரதியுடன் நடுரோட்டில் அவருடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பாரதி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவை குத்த முயன்றார். இதனால் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை காப்பாற்ற முயன்றனர்.
அப்போது பாரதி அருகே வந்தால் கத்தியால் குத்தி விடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன மக்கள் யாரும் அருகே செல்லாமல் உடனடியாக பொள்ளாச்சி கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் ஆத்திரத்தில் இருந்த பாரதி தான் கையில் வைத்திருந்த கத்தியால் சுவேதாவின் வயிறு உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்க முடியாத சுவேதா ரத்த வெள்ளத்தில் சரிந்து, அப்படியே நடுரோட்டில் விழுந்து உயிருக்கு போராடினார். ஆனாலும் ஆத்திரம் தீராத பாரதி, சுவேதாவை தரதரவென இழுத்து அருகே உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தள்ளி கழுத்தை நெரித்தார். இதில் சிறிது நேரத்தில் சுவேதா உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடலை எடுத்து சாலையில் போட்டு விட்டு அதன் முன்பு அமர்ந்திருந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார் பாரதியை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொலை செய்ததாக பாரதி கூறினார். போலீசார் சுவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக பாரதியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே பாரதி நடுரோட்டில் சுவேதாவை குத்தி கொலை செய்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பார்ப்போருக்கு அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், கத்தியால் குத்தப்பட்ட சுவேதா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அப்போது ஆத்திரம் தீராத பாரதி சுவேதாவை தர, தரவென இழுத்து அருகே உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தள்ளினார்.
சாக்கடை கால்வாய்க்குள் தள்ளி விட்டு, அவரது கழுத்தில், கால் மற்றும் கையை வைத்து நெரித்தபடி சாவு.. சாவு... என்று சொல்லியபடியே கொடூரமாக கொலை செய்தார். இதில் சுவேதா துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போகிறார். சுவேதா இறந்ததை உறுதி செய்த பாரதி, நீ செத்தியா, செத்தியா என சத்தம் போட்டபடி, அவரது உடலை சாக்கடை கால்வாயில் இருந்து தூக்கி வெளியில் போட்டு விட்டு, அதன் முன்பு அமர்ந்து அவரது உடலை பார்த்தபடி இருக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
மேலும் இத்தனை ஆம்பளைங்க நிற்கிறீங்க... யாராவது போய் தடுங்க... என்று ஒரு பெண் கதறும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. பொதுமக்களில் யாராவது ஒருவர் துணிச்சலுடன் சென்று பாரதியை தடுத்து இருந்தால் பரிதாபமாக ஒரு உயிர் போய் இருக்காது. தற்போது தாயை இழந்து அவரது 2 குழந்தைகள் தவிக்கின்றன.
கோவை போத்தனூரை சேர்ந்தவர் பாபு(வயது 50). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுமதி(42).
இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சுமதி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சி சி.டி.சி. காலனியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு தாய் விசாலாட்சியுடன்(60) வசித்து வந்தார்.
பாபு அடிக்கடி மாமியார் வீட்டுக்கு குடிபோதையில் சென்று மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இது சுமதிக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீசு அனுப்பினார். இதனால் பாபு ஆவேசம் அடைந்தார்.
நேற்று நள்ளிரவு மாமியார் வீட்டுக்கு சென்ற பாபு நீண்ட நேரம் கதவை தட்டினார். இதனால் மாமியார் விசாலாட்சி கதவை திறந்து பாபுவை கண்டித்தார். அப்போது பாபு மறைத்து வைத்திருந்த கத்தியால் விசாலாட்சி கழுத்தை அறுத்தார். இதனால் அவர் அலறித் துடித்தபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்து இறந்தார்.

விசாலாட்சியின் மகன் பிரகாஷ் அப்பகுதியில் வசித்து வருகிறார். அவர் வழக்கம்போல தாயை பார்ப்பதற்காக இன்று அதிகாலை வீட்டுக்கு சென்றார். வீட்டில் தாய், தங்கை ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற போது அங்கு பாபு தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து அவர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவஇடத்துக்கு டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
குடும்ப பிரச்சனையில் மனைவி, மாமியாரை கொலை செய்து விட்டு பாபு தற்கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி முனிசிபல் ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனையொட்டி மதுபாரும் உள்ளது. தீபாவளியையொட்டி இன்று 12 மணிக்கு மதுக்கடை திறக்கப்பட்டதும் கூட்டம் அதிமாக இருந்தது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த ஆனந்த் என்பவரும் மது குடிக்க வந்தார். ஆனந்த் கடந்த 6 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். அதே நேரத்தில் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த போஸ் என்பவர் தனது நண்பருடன் மதுக்குடிக்க வந்தார்.
போதை தலைக்கேறியதும் ஆனந்துக்கும் போசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆனந்த் போசை தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனது நண்பர்களை அழைத்தார். அதன்படி 6 பேர் அங்கு வந்தனர். பாருக்கு வெளியே நின்ற ஆனந்த்தை போஸ் உள்பட 8 பேர் தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ஆனந்த் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு ஆன்ந்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






