search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pm shinzo abe"

    இருநாள் பயணமாக ஜப்பான் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தனது பங்களாவில் விருந்து அளிக்கிறார் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே. #Modi #ShinzoAbe
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் 28 மற்று ம் 29ம் தேதிகளில் ஜப்பான் செல்ல உள்ளார்.

    இரண்டு நாள் அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் மோடிக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது பங்களாவில் விருந்தளிக்க உள்ளார்.

    முதல் நாளான 28-ம் தேதி பிரதமர் மோடி யாமனாஷி நகருக்கு செல்கிறார். அங்கு இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 



    மறுநாள் 29-ம் தேதி டோக்கியோவில் நடக்கும் சந்திப்பில் இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியும், பிரதமர் ஷின்சோ அபேவும் விவாதிக்க உள்ளனர். அங்குள்ள 'ரோபோ' தயாரிப்பு மையத்துக்கு சென்று, மோடி பார்வையிடுகிறார்.

    மேலும், ஜப்பான் செல்லும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அபேயின் தனிப்பட்ட சொகுசு பங்களாவில் விருந்தளிக்க உள்ளார்.

    ஷின்சோ அபே தனது சொகுசு பங்களாவுக்கு வரும்படி வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு அழைப்பு விடுப்பதும், விருந்து அளிப்பதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #ShinzoAbe
    வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர். #TrumpKimsummit #Trump #ShinzoAabe
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

    இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் நேற்று தொலைபேசியில் பேசினர். வட கொரியாவுடனான சந்திப்பு குறித்து இருவரும் ஆலோசித்தனர். அப்போது, வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது. #TrumpKimsummit #Trump #ShinzoAabe
    ×