search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol scooters"

    • இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் கைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் கைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முதற்கட்டமாக ரூ.15.86 லட்சம் மதிப்பீட்டில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் கைபேசி என மொத்தம் 106 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3,000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    மாற்றுத் திறனாளிகளுக்கான சுய வேலை வாய்ப்பினை ஊக்குவிக்க, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விளிம்பு உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக 2018-2019-ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

    தசைச் சிதைவு நோயினால் பாதிப்படைந்தோர், முதுகுத் தண்டு வடம் பாதிப்படைந்தோர், மூளை முடக்குவாதத்தினால் பாதிப்படைந்தோருக்காக, தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள், இரு கால்கள் பாதிப்படைந்தோருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் போன்ற நவீன உதவி உபகரணங்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதாகவும், தன்னிச்சையாக இயங்குவதற்காகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

    தற்போதைய தேவையைக் கருத்தில் கொண்டு 2019-2020-ம் ஆண்டிற்கு இதற்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டு 3 ஆயிரம் சிறப்பு சக்கர நாற்காலிகளும், 3 ஆயிரம் பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.

    இது தவிர செவித்திறன் பாதிப்படைந்தோருக்கான காதுக்குப்பின் அணியும் காதொலிக் கருவிகளும், பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான உயர் தொழில் நுட்ப ஊன்று கோல்களும் வழங்கப்படுகின்றன. 2019-2020-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 572.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #TNBudget2019 #Budget2019 #OPS
    ×