என் மலர்
நீங்கள் தேடியது "peikulam"
- பேய்க்குளம் வழியாக சென்னைக்கு அரசு விரைவு பஸ் இயக்கிட வேண்டும்
- ஒன்றிய செயலாளர் சேசுமணி தலைமை தாங்கினார்.
சாத்தான்குளம்:
பேய்க்குளம் கடைவீதி பகுதியில் மழை நீர் தேங்காமல் சாலையை சீரமைக்க வேண்டும், மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கிடவும், சாத்தான்குளம், பேய்க்குளம் வழியாக சென்னைக்கு அரசு விரைவு பஸ் இயக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பொது மக்களின் கோரி க்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாத்தான்குளம் ஒன்றியக்குழு சார்பில் சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சேசுமணி தலைமை தாங்கினார்.
கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாத்துரை, பால கிருஷ்ணன், பாலசுந்தர கணபதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், ரவிச்சந்திரன், சிவபெருமாள், முருகன், நெல் சன், பாக்கிய லட்சுமி, மரிய ஏசுவடியான் ஆகியோர் பேசினர். இதில் கிளை செயலா ளர்கள் சுயம்பு, வீராப்பழம், பால்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
- வேளாண்மை இயக்கத்தின் மூலம் விவசாயிகள் பெருவிழா பேய்க்குளத்தில் நடைபெற்றது.
- தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் பயிற்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சாத்தான்குளம்:
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் மூலம் விவசாயிகள் பெருவிழா பேய்க்குளத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர்அல்லிராணி பயிற்சிகளை வழங்கினார். பயிற்சியை தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ் உழவர்களுக்கான பயிற்சி மற்றும் பயிற்சி முறைகள் பற்றியும், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் (பூச்சியியல்) ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயன்பாடு,பயிர்களை பூச்சி நோய்கள் மேலாண்மை முறைகள் பற்றியும்,ஓய்வுபெற்ற மேலாண்மை கூடுதல் இயக்குனர் மகாதேவன் இயற்கை மற்றும் நுண்ணூட்ட வளங்கள் பற்றியும், ஸ்பிக் நிறுவனத்தின் விக்னேஷ் மண் மாதிரி எடுக்கும் முறைகள், உரமிடுதல் முறைகள் பற்றியும் பேசினார். தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் கென்னடி பனை பாதுகாப்பு பற்றி பேசினார்.
இதில் கருங்கடல் ஊராட்சி மன்ற தலைவர் நல்லதம்பி ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பபுரம் காந்திமதி உட்பட விவசாயிகள் 120 பேர் கலந்து கொண்டனர். ஆழ்வார்திருநகரி துணை வேளாண்மை அலுவலர் தங்க மாரியப்பன் நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவி வேளாண்மை அலுவலர்கள் அட்மா திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
- பேய்க்குளம் பகுதியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
- முகாமில் 461 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேய்க்குளம் பகுதியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பேய்க்குளம் அரசு பள்ளி, சவேரியார்புரம் ஆர்.சி பள்ளி, கீழப்பனைகுளம் டி.டி.டி.ஏ. பள்ளி, மீரான்குளம்துணை சுகாதார நிலையம், கட்டாரிமங்கலம் அங்கன்வாடி மையத்தில் நடந்த முகாமில் செவிலியர்கள் சொர்னலதா, ரமா, லட்சுமி, நாகவள்ளி, பாலம்மாள் ஆகியோர் மக்களுக்கு பரிசோதனை நடத்தி தடுப்பூசி செலுத்தினர். இம்முகாமை சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா பார்வையிட்டார். இதில் 461 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார், மற்றும் ஆஷா, டெங்கு மஸ்தூர், அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர்.






