என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்.
பேய்க்குளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- பேய்க்குளம் வழியாக சென்னைக்கு அரசு விரைவு பஸ் இயக்கிட வேண்டும்
- ஒன்றிய செயலாளர் சேசுமணி தலைமை தாங்கினார்.
சாத்தான்குளம்:
பேய்க்குளம் கடைவீதி பகுதியில் மழை நீர் தேங்காமல் சாலையை சீரமைக்க வேண்டும், மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கிடவும், சாத்தான்குளம், பேய்க்குளம் வழியாக சென்னைக்கு அரசு விரைவு பஸ் இயக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பொது மக்களின் கோரி க்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாத்தான்குளம் ஒன்றியக்குழு சார்பில் சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சேசுமணி தலைமை தாங்கினார்.
கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாத்துரை, பால கிருஷ்ணன், பாலசுந்தர கணபதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், ரவிச்சந்திரன், சிவபெருமாள், முருகன், நெல் சன், பாக்கிய லட்சுமி, மரிய ஏசுவடியான் ஆகியோர் பேசினர். இதில் கிளை செயலா ளர்கள் சுயம்பு, வீராப்பழம், பால்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.






