என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Patteeswaram"

    பட்டீஸ்வரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அருகே மாடாகுடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி சந்தியா (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சந்தியா , சென்னையில் தங்கியிருந்து வீட்டு வேலை செய்து வந்தார். இதனால் குழந்தைகளை உறவினர் கோபால கிருஷ்ணன் என்பவர் கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா ஊருக்கு திரும்பினார்.

    அப்போது குழந்தைகள் 2 பேரும், சந்தியாவிடம் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தியா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சந்தியா கயிற்றால் தூக்குப் போட்டார். இதை பார்த்த அவரது உறவினர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் பற்றி பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனுபுரிஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்த பெருமானுக்கு திருமுலைப் பால், பொற்றாளம், முத்துகொண்டை, முத்துக்குடை, முத்துப்பந்தல் நல்கும் திருவிழா வருகிற 13-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.
    கும்பகோணம் அடுத்துள்ள பட்டீஸ்வரத்தில் உள்ள ஞானம்பிகை சமேத தேனுபுரிஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்த பெருமானுக்கு திருமுலைப் பால், பொற்றாளம், முத்துகொண்டை, முத்துக்குடை, முத்துப்பந்தல் நல்கும் திருவிழா வருகிற 13-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.

    13-ம் தேதி காலை 9மணிக்கு கோயில் குளக் கரையில் திருஞான சம்பந்த மூர்த்திக்கு அன்னை ஞானம்பிகை திருமுலைப்பால் வழங்கும் விழாவும், இரவு பொற்றாளம் தந்து சுவாமி அம்பாள் வீதிஉலாவும் நடக்கிறது. 14ம் தேதி காலை 7மணிக்கு திருஞானசம்பந்த மூர்த்திக்கு ஈசன் முத்துக் கொண்டை முத்துக்குடை மற்றும் முத்து சின்னங்கள் வழங்கும் விழாவும், மாலை மின் அலங்காரத்துடன் கூடிய அழகிய முத்துதிரு ஓடத்தில் வீதிஉலாவும் நடைபெறும். தொடர்ந்து 15-ம் தேதி காலை திருஞானசம்பந்த மூர்த்தி திரு மடாலயத்திலிருந்து திருமேற்றளிகை கைலாசநாத சுவாமி திருக்கோயிலுக்கு அழகிய முத்து பந்தலில் எழுந்தருளி அதன் பின் திருசக்தி முற்றம் சக்திவனேஸ்வர சுவாமியை தரிசிப்பார்.

    நிறைவில் தேனுபுரீஸ்வரர் வழங்கியருளிய அழகிய முத்துப் பந்தலில் திருஞான சம்பந்த மூர்த்தி காட்சியளித்து தேனுபுரீஸ்வரரை வழிபடும் நிகழ்வும், அன்று இரவு சுவாமி அம்பாள் முத்து விமானத்திலும் திருஞான சம்பந்தமூர்த்தி முத்துப் பந்தலிலும் உலாவுடன் நடைபெறஉள்ளது. ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
    ×