search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dhenupureeswarar temple"

    தேனுபுரிஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்த பெருமானுக்கு திருமுலைப் பால், பொற்றாளம், முத்துகொண்டை, முத்துக்குடை, முத்துப்பந்தல் நல்கும் திருவிழா வருகிற 13-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.
    கும்பகோணம் அடுத்துள்ள பட்டீஸ்வரத்தில் உள்ள ஞானம்பிகை சமேத தேனுபுரிஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்த பெருமானுக்கு திருமுலைப் பால், பொற்றாளம், முத்துகொண்டை, முத்துக்குடை, முத்துப்பந்தல் நல்கும் திருவிழா வருகிற 13-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.

    13-ம் தேதி காலை 9மணிக்கு கோயில் குளக் கரையில் திருஞான சம்பந்த மூர்த்திக்கு அன்னை ஞானம்பிகை திருமுலைப்பால் வழங்கும் விழாவும், இரவு பொற்றாளம் தந்து சுவாமி அம்பாள் வீதிஉலாவும் நடக்கிறது. 14ம் தேதி காலை 7மணிக்கு திருஞானசம்பந்த மூர்த்திக்கு ஈசன் முத்துக் கொண்டை முத்துக்குடை மற்றும் முத்து சின்னங்கள் வழங்கும் விழாவும், மாலை மின் அலங்காரத்துடன் கூடிய அழகிய முத்துதிரு ஓடத்தில் வீதிஉலாவும் நடைபெறும். தொடர்ந்து 15-ம் தேதி காலை திருஞானசம்பந்த மூர்த்தி திரு மடாலயத்திலிருந்து திருமேற்றளிகை கைலாசநாத சுவாமி திருக்கோயிலுக்கு அழகிய முத்து பந்தலில் எழுந்தருளி அதன் பின் திருசக்தி முற்றம் சக்திவனேஸ்வர சுவாமியை தரிசிப்பார்.

    நிறைவில் தேனுபுரீஸ்வரர் வழங்கியருளிய அழகிய முத்துப் பந்தலில் திருஞான சம்பந்த மூர்த்தி காட்சியளித்து தேனுபுரீஸ்வரரை வழிபடும் நிகழ்வும், அன்று இரவு சுவாமி அம்பாள் முத்து விமானத்திலும் திருஞான சம்பந்தமூர்த்தி முத்துப் பந்தலிலும் உலாவுடன் நடைபெறஉள்ளது. ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
    ×