search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pastor arrest"

    • வழக்கு தொடர்பாக போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.
    • சிறுமிகள் இறைவனுக்காக தங்கள் நல்லொழுக்கத்தை தியாகம் செய்தார்கள்.

    அமெரிக்காவைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் ராப்பிலி பேட்மேன் (46). ஒரு குழுவின் போதகராக சாமுவேல் இருந்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் இந்த குழுவின் தலைமையை ஏற்றுக்கொண்ட பிறகு, சாமுவேல் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று பிரகடனம் செய்யத் தொடங்கினார்.

    இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மிகவும் ஒரு மோசமான வாகனத்தில் அடைத்து வாகனத்திற்குள் இளம் வயது பெண்களை ஏற்றிச் செல்லும்போது பேட்மேன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அதன் பிறகு தொடர்ந்து பேட்மேனை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.

    அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், பேட்மேனுக்கு அவரது சொந்த மகள் உள்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், சாமுவேல் கொள்கைகளை சுமார் 50 பேர் பின்பற்றிவந்தனர். 20க்கும் மேற்பட்ட மனைவிகளில் 9க்கும் மேற்பட்டவர்கள் சிறுமிகள் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்டவர்கள். அதுமட்டுமின்றி, அந்த குழுவின் உறுப்பினர்களையும் தங்களின் சிறு வயது மகள்களுடன் உடலுறவில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    சாமுவேல் இதுகுறித்து உரையாற்றும் போது, "சிறுமிகள் 'இறைவனுக்காக தங்கள் நல்லொழுக்கத்தை தியாகம் செய்தார்கள் என கூறி உள்ளார்.

    கொலராடோ நகரில் உள்ள அவரது இரண்டு வீடுகளில், எப்.பி.ஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைக்கு பின், அவரை கைது செய்து அரிசோனா சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பூந்தமல்லியில் கடவுள் சக்தி உள்ளதாக கூறி குழந்தை இல்லாத தம்பதியிடம் ரூ.7½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.
    செவ்வாப்பேட்டை:

    அய்யப்பன் தாங்கலை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி ‌ஷர்மிளா.

    ஆனந்த-‌ஷர்மிளா தம்பதிக்கு திருமணம் நடந்து 8 வருடங்கள் ஆகின்றன. குழந்தை இல்லை. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் இல்லை.

    இந்தநிலையில், பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்ற கிறிஸ்தவ மத போதகரை சந்தித்தனர். அவர் தன்னிடம் கடவுள் சக்தி இருப்பதாகவும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபம் சொல்லுவதாகவும் கூறியுள்ளனர். அதற்கு பணமும் கேட்டுள்ளார்.

    இதை நம்பிய ஆனந்த்- ‌ஷர்மிளா தம்பதியினர் கிறிஸ்தவ மதபோதகருக்கு பணம் கொடுத்ததாக தெரிகிறது. ரூ.7½ லட்சம் வரை அவர் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சொன்னபடி அந்த தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

    இதனால் ஏமாற்றம் அடைந்த ஆனந்த் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கிறிஸ்தவ மத போதகர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    தோவாளை அருகே அதிமுக பிரமுகரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்த போதகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    தாழக்குடி கண்டமேட்டுக் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 63). இவர் தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார்.

    இவரது மனைவி லதா ராமச்சந்திரன். அ.தி.மு.க. மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். ராமச்சந்திரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் அ.தி.மு.க. கட்சியில் உள்ளேன். மக்கள் பிரச்சினைக்காக அடிக்கடி சென்னை தலைமை செயலகத்திற்கு செல்வது வழக்கம். அப்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த போதகர் ஜோன்ஸ் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், பலருக்கு வேலை வாங்கிக்கொடுத்து இருப்பதாகவும், பணி இட மாறுதல் வாங்கிக்கொடுத் திருப்பதாகவும் என்னிடம் கூறினார்.

    அவரது ஆசை வார்த்தைகளை நம்பினேன். எனது மூத்த மகன் பினிலுக்கு உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். அதற்காக 10 லட்சத்து 75 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டார். மேலும் எனது தங்கையின் மகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டார். பணம் வாங்கிய பிறகு ஜோன்ஸ் எந்த காரியத்தையும் செய்து தரவில்லை.

    இதையடுத்து நான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டேன் தொடர்ந்து கேட்டதன் பேரில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை திருப்பிக் கொடுத்தார். ரூ.10 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை திருப்பித் தரவில்லை. தொடர்ந்து ஏமாற்றிவந்தார்.எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையிலான போலீசார் இந்த மனு மீது விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜோன்ஸ் பணம் வாங்கி விட்டு ஏமாற்றியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது போலீசார் இந்திய தண்டனைச்சட்டம் 420 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் இன்று காலை ஜோன்சை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews
    ×