பிரமாணப் பத்திரத்தில் திடுக்கிடும் தகவல்- கைது செய்யப்பட்ட மதபோதகருக்கு சொந்த மகள் உள்பட மொத்தம் 20 மனைவிகள்

வழக்கு தொடர்பாக போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.சிறுமிகள் இறைவனுக்காக தங்கள் நல்லொழுக்கத்தை தியாகம் செய்தார்கள்.
பிரமாணப் பத்திரத்தில் திடுக்கிடும் தகவல்- கைது செய்யப்பட்ட மதபோதகருக்கு சொந்த மகள் உள்பட மொத்தம் 20 மனைவிகள்
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் ராப்பிலி பேட்மேன் (46). ஒரு குழுவின் போதகராக சாமுவேல் இருந்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் இந்த குழுவின் தலைமையை ஏற்றுக்கொண்ட பிறகு, சாமுவேல் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று பிரகடனம் செய்யத் தொடங்கினார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மிகவும் ஒரு மோசமான வாகனத்தில் அடைத்து வாகனத்திற்குள் இளம் வயது பெண்களை ஏற்றிச் செல்லும்போது பேட்மேன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு தொடர்ந்து பேட்மேனை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.

அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், பேட்மேனுக்கு அவரது சொந்த மகள் உள்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சாமுவேல் கொள்கைகளை சுமார் 50 பேர் பின்பற்றிவந்தனர். 20க்கும் மேற்பட்ட மனைவிகளில் 9க்கும் மேற்பட்டவர்கள் சிறுமிகள் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்டவர்கள். அதுமட்டுமின்றி, அந்த குழுவின் உறுப்பினர்களையும் தங்களின் சிறு வயது மகள்களுடன் உடலுறவில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சாமுவேல் இதுகுறித்து உரையாற்றும் போது, "சிறுமிகள் 'இறைவனுக்காக தங்கள் நல்லொழுக்கத்தை தியாகம் செய்தார்கள் என கூறி உள்ளார்.

கொலராடோ நகரில் உள்ள அவரது இரண்டு வீடுகளில், எப்.பி.ஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைக்கு பின், அவரை கைது செய்து அரிசோனா சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com