search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parlimentary Election"

    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.
    • அப்போது பாராளு மன்ற தேர்தலுக்கான வியூகம் அமைப்பது குறித்து கட்சியினரிடம் அவர் கருத்துக்களை கேட்கிறார்.

    தூத்துக்குடி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.

    நிர்வாகிகள் கூட்டம்

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. அதிக எம்.பி. தொகுதியில் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்கும் நோக்கில் கட்சிப் பணிகளை அவர் தீவிரப் படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், தூத்துக்குடியில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் மாநில தலைவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் காலை 10 மணிக்கு நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம், நெல்லை தெற்கு மாவட்டம்,வடக்கு மாவட்டத்தில் உள்ள சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    தேர்தல் வியூகம்

    அப்போது பாராளு மன்ற தேர்தலுக்கான வியூகம் அமைப்பது குறித்து கட்சியினரிடம் அவர் கருத்துக்களை கேட்கிறார்.

    சுமார் 3 மணி நேரம் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்ட பின்னர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெரும் வியூகம் குறித்து அண்ணாமலை பேசுகிறார், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இக்கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட 26 ஆசிரியர்கள், பணியை செய்ய மறுத்ததால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #RefusingElectionWork #TeachersBooked
    பால்கர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்சித்தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து மாநிலங்களிலும் துரிதப்படுத்தி வருகின்றது.

    மகாராஷ்டிராவில் வரும் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி நான்கு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில், பெயர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

    அவ்வகையில் பால்கர் மாவட்டத்தின் நல்லசோபரா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள்  தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் முதல் 2019 பிப்ரவரி வரை உள்ள தேர்தல் பணிகளை செய்து முடிக்க வேண்டும். ஆனால் இந்த பணிகளுக்காக நியமிக்கப்பட்ட 26 ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு வரவில்லை.

    இதையடுத்து அப்பகுதியின்  தேர்தல் நடத்தும் அதிகாரி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், தேர்தல் பணிகளை செய்ய மறுத்த 26 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #RefusingElectionWork #TeachersBooked 
    ஈராக்கில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மதகுரு மக்தாதா சதார் தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. #IraqElection #MuqtadaAlsadr
    பாக்தாத்:

    ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐ.எஸ். தீவிரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர்.

    தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.

    அதைதொடர்ந்து ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதில் மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின.



    இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில் மதகுரு மக்தாதா தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 2-வதாக 47 இடங்கள் வந்துள்ளது.

    இத்தேர்தலில் பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கட்சி 42 இடங்கள் பிடித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    தேர்தலில் வெற்றி பெற்றாலும் மதகுரு மக்தாதா சதார் பிரதமராக முடியாது. ஏனெனில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் ஷியா பிரிவு தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தார். இதனால் இவர் அமெரிக்காவின் நீண்டகால எதிரி ஆவார்.

    மக்தாதா பிரதமராக முடியாவிட்டாலும் புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    #IraqElection #MuqtadaAlsadr
    ×