search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paramankurichi"

    • சித்திரை பெருங்கொடைவிழா கடந்த 30-ந்தேதி வருஷாபிசேகத்துடன் தொடங்கியது.
    • விழாவில் சமைய சொற்பொழிவு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை பெருங்கொடைவிழா கடந்த 30-ந்தேதி காலை 8 மணிக்கு வருஷாபிசேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு உடன்குடி வட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, வறட்சி நீங்கி பசுமை வேண்டி பெண்கள் பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடு செய்யும் திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது.

    1-ந்தேதி முதல் தினசரி நண்பகல் மற்றும் நள்ளிரவு நேரங்களில் சிறப்பு பூஜைகளுடன் சுவாமி எழுந்தருளல், வில்லிசை, பால்குடம் பவனி, மஞ்சள் நீராடுதல். சமைய சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி போன்ற சிறப்பு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது.

    அதிகாலை 3 மணிக்கு அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது, தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    முகாமில் டிஜிட்டல்எக்ஸ்ரே, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், இரத்தப்பரிசோதனைகள் செய்யப்பட்டது. நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    பரமன்குறிச்சியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    பரமன்குறிச்சி ஊராட்சி தலைவர் இலங்காபதி, மருத்துவர்கள் ஆர்த்தி பிரசாத், அஸ்வின், ஜெயபரணி, பிச்சுமணி, சுகாதார ஆய்வாளர்கள் சேதுகுற்றாலம், சேதுபதி, ஆழ்வார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுலவலர் அனிபிரிமின் வரவேற்றார்.

    முகாமில் டிஜிட்டல்எக்ஸ்ரே, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், இரத்தப்பரிசோதனைகள் செய்யப்பட்டது. நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளி தாளாளர் ராஜ்குமார், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட மாணவரணி துணைஅமைப்பாளர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பரமன்குறிச்சி பார்வதி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது.
    • 3-ம் நாள் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு உணவுசமைத்தல், மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கொடை விழா நிறைவு பெற்றது.

    உடன்குடி:

    பரமன்குறிச்சி பார்வதி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. இதன் முதல் நாள் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு மங்கையர்கரசி மாதர் மன்றத்தின் சார்பில் திருவிளக்கு வழிபாடு, இரவு 7 மணிக்கு கொலுமேளம், நாதஸ்வர இன்னிசை, இரவு 8 மணிக்கு அம்மன் திருப்பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு கற்பூர தீபாராதனை பூஜைகள் நடந்தது. 2-ம் நாள்காலை 8 மணிக்கு நையாண்டி மேளம், காலை 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பச்சை சாத்தி புஷ்ப அலங்காரத்துடன் விசேஷ கற்பூர தீபாராதனை, மாலை 6 மணிக்கு சிவனுக்கு பொங்கலிட்டு அம்மனுக்கு சிவப்பு சாத்தி அலங்காரத்துடன், கற்பூர தீபாராதனை, அம்மனுக்கு படைக்கஞ்சி வார்த்தல், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு பட்டு மற்றும் நேர்ச்சை பொருட்களை கொண்டு வருதல் தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு விசேஷ புஷ்ப அலங்கார காட்சி தீபாராதனையும் நடந்தது.

    இதில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொருளாளர் ராமநாதன், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, பரமன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், ராஜாபிரபு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் நெசவாளர்அணி செந்தில் அதிபன், வர்த்தகர்அணி மாடசாமி, மாணவரணி செந்தில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 3-ம் நாள் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு உணவுசமைத்தல், மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கொடை விழா நிறைவு பெற்றது. பின்பு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் தலைவர் அப்பு (என்ற) நல்லகுட்டி, பொருளாளர் கண்ணன், செயலாளர் தினகரன், இந்து வாலிபர் சங்கத்தினர், மங்கையர்க்கரசி மாதர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட பரமன்குறிச்சி அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள், சமுதாய நலக்கூடம், பூங்கா, நியாயவிலை கடை, பெரியார் சிலை மற்றும் தார் சாலைகள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைக்கான அனைத்தும் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளை ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில்ஆய்வு மேற்கொண்டனர்.

    திட்ட பணிகளின் மதிப்பீடு என்ன? முறையாக நடக்கிறதா? என்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.

    இதில் கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், திருச்செந்தூர் தாசில்தார் சாமிநாதன், உடன்குடிவட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், தி.மு.க. மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட பிரதிநிதி ராஜாபிரபு, கே.டி.சி. தினகர், பெத்தாமுருகன், மாணவரணி அருண்குமார், எள்ளுவிளை கிளைச் செயலாளர் மோகன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் ஊரக வளர்ச்சி முதன்மை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×