search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palus Kadegaon assembly"

    நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #BypollResults #BypollCongressWin
    புதுடெல்லி:

    உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

    இதில், உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து ஆகிய மக்களவைத் தொகுதியின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

    கைரானா தொகுதியில் பா.ஜ.க. எம்பி. ஹூக்கும் சிங் மறைந்ததையடுத்து நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் அவரது மகள் மிரிங்கா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தபசும் ஹசன் போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சிகள் ஆதரவு அளித்தன.

    வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்கப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, 73 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதேபோல் உ.பி.யின் நூர்பூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. லோகேந்திர சிங் சாலை விபத்தில் இறந்ததால் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் லோகேந்திர சிங்கின் மனைவி அவானி சிங் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சமாஜ்வாடி கட்சி சார்பில் நீமுல் ஹசன் போட்டியிட்டார்.



    இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், மகாராஷ்டிர மாநிலம் பலாஸ் கதேகான் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்வஜீத் பதாங்ரோவ் கதம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #BypollResults #BypollCongressWin

    ×