search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pachamuthu"

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேட்கும் தொகுதிகள், எண்ணிக்கையில் இடங்களை வழங்காவிட்டால் தனித்து போட்டியிட போவதாக ஐ.ஜே.கே. நிறுவனர் பச்சமுத்து தெரிவித்துள்ளார். #IJK #Pachamuthu
    திருச்சி:

    இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனர் பச்சமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    தோழமை கட்சியான பா.ஜ.க.வுடன் இன்றும் தோழமையுடன் இருந்து வருகிறோம். ஆனால் கூட்டணியில் இருந்து விலகி சென்ற கட்சிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோருடனான நட்பு மட்டும் இருந்து அரசியல் செய்ய முடியாது. தமிழகத்தில் உரிய மரியாதை வழங்கப்படவேண்டும். தமிழக பா.ஜ.க.வானது எங்களை அலட்சியப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் கேட்கும் தொகுதிகள், எண்ணிக்கையில் இடங்கள் வழங்கினால் மட்டுமே தோழமையுடன் தொடருவதா? என்பது குறித்து பரிசீலிப்போம். இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலோ, டி.டி.வி.தினகரன் தலைமையிலான கூட்டணியிலோ இடம்பெற மாட்டோம்.

    8 ஆண்டுகளில் எங்களது கட்சி நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. எங்கள் கட்சியின் கொள்கைகள் அனைத்தும் சிறந்தவை. எனவே மெதுவாகவே அவை மக்களிடம் சேரும். அரசியலில் இருந்து சம்பாதித்து மக்களுக்கு வழங்கும் கட்சியில்லை இது. சொந்த தொழிலில் இருந்து வரும் வருவாயில் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி.

    கஜா புயல், தானே புயல் தருணங்களில் பாதிப்பு பகுதிகளை சேர்ந்த எஸ்.ஆர்.எம். குழும மாணவர்களின் கல்வி கட்டணத்தில் ரூ.55.5 கோடி விலக்கு அளித்துள்ளோம். ரூ.1 கோடியில் நிவாரண உதவி வழங்கியுள்ளோம். 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கி வருகிறோம். தொடர் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம்.

    புயல் பாதித்த பகுதிகளில் மரங்களை அப்புறப்படுத்தவும், அவற்றை தூள்களாக்கி எருவாக மாற்றி விற்கவும் தேவையான எந்திர உதவிகளை வழங்கியுள்ளோம். மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    வாக்குகளுக்கு தரப்படும் பணத்தை வாங்க வேண்டாம்? என 30 மாணவர்கள் கொண்ட குழு மூலம் சென்னை தொடங்கி குமரி வரை விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறோம். மேற்கு வங்க மாநில முதல்வரை போல செயல்பட்டால் ஒவ்வொரு மாநிலமும் தனி நாடாக மாற வேண்டியதுதான். சி.பி.ஐ. உள்ளிட்ட அந்தந்த அமைப்புகளுக்குரிய பொறுப்பை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும்.

    ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களது மறைவுக்கு பிறகு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கூறுவதை ஏற்க முடி யாது. வேறு தலைவர்கள் வருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும். நதிகள் இணைக்கப்பட வேண்டும். மக்களவை தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க நிறுவனர் பச்சமுத்துவுக்கு அதிகாரம் அளிப்பது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, மாநில பொதுச்செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன், வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #IJK #Pachamuthu
    தமிழக அரசில் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் உடனே பதவி விலக வேண்டும் என ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பச்சமுத்து கூறியுள்ளார். #gutkha #ministervijayabaskar
    பெரம்பலூர்:

    இந்திய ஜனநாயக கட்சியின் திருச்சி மண்டல ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது.
    மாநில தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், மாநில விவசாய பிரிவு செயலாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் அன்பழகன் உட்பட பலர் பேசினர். கட்சி நிறுவனர் பச்சமுத்து சிறப்புரையாற்றினார்.

    இதில் கட்சி செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை, அரசியல் நிலைப்பாடு, வளர்ச்சி பணிகள் மேற் கொள்ளுதல், தேர்தல் கூட்டணி, நிர்வாகிகள் செயல்பாடு போன்றவை குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    பின்னர் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து நிருபர்களிடம் கூறுகையில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா ஊழலில் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டவுடன் அவர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக கட்சியில் உயர் பதவி கொடுப்பது அங்கே குறைகள் அதிகமாக உள்ளது என அர்த்தம். அதை எங்கே வெளியே சொல்லி விடுவார் என பதவி கொடுத்து மறைக்கின்றனர்.

    தமிழகத்தில் வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. எனவே அரசு இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஊழலை கண்டித்து தி.மு.க. கண்டன போராட்டம் நடத்தியது. இதனால் மக்கள் அலை அவர்கள் பக்கம் திரும்பி விடுமோ என்ற பயத்தால் தற்போது ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தமிழக அரசு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக ஆட்சி நடத்துவதில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும் என்றார்.  #gutkha #ministervijayabaskar
    ×