search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "owners association"

    • சோலார் மேற்கூரை நெட் வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
    • தமிழக அரசு அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் உள்ள தொழில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மின்துகர்வோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணம், பரபரப்பு நேர ( பீக் ஹவர் ) கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். '3பி'யில் இருந்து '3ஏ1' நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சோலார் மேற்கூரை நெட் வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாவட்ட தலைவர் தாமஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள். அந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளித்து அனைத்து கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்களும் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 3பி கட்டணத்தை 3 ஏ முறைக்கு மாற்றி அமைத்திருப்பதாக அறிவித்திருந்தாலும் அது ஒர்க்ஷாப் தொழிலுக்கு பொருந்தாது. எனவே தமிழக அரசு அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • சினிமா தியேட்டர்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை.
    • கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் இந்த நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டனர்.

    சென்னை:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களிடம் குறைவான அளவே புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகள் நாளை மறுநாளுக்கு(செப்டம்பர் 30-ந்தேதி) பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது.

    இதனை தொடர்ந்து வங்கிகள் மூலமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடங்கியது. கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், பலர் இன்னும் வங்கிகளில் இந்த நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர்.

    இந்த சூழலில் காலக்கெடு முடிவதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் பஸ்களில் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று கண்டக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றால், அதற்கு கண்டக்டர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இதேபோல் சினிமா தியேட்டர்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை.

    கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் இந்த நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டனர். இதே போல பெட்ரோல் பங்குகளிலும் இன்று முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

    தமிழகத்தில் மொத்தம் 5,900 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    ×