என் மலர்

  நீங்கள் தேடியது "no confident motion"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவ்கதா ராய், தேர்தலில் ஒத்தைக்கு ஒத்தை மோதினால் பாஜக தோல்வியை மட்டுமே தழுவும் என தெரிவித்துள்ளார். #NoConfidenceMotion
  புதுடெல்லி:

  மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அதற்கான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பல கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

  இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சியும், பிஜு ஜனதா தள கட்சியும் வெளியேறியது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.  இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சவ்கதா ராய் பேசுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சுமார் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் மீதும், கூட்டணி கட்சிகள் மீதும் பா.ஜ.க நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

  மேலும், சமீபத்தில் பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க கடுமையான வீழ்ச்சியை சந்தித்தாகவும், கர்நாடகவிலும் தோல்வியை தழுவியதாகவும் தெரிவித்த அவர், வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் தோல்வியை தழுவும் எனவும் தெரிவித்தார்.

  பொதுக்கூட்டங்களிலும், காணொளி காட்சிகள் மூலம் விவசாயிகள் பொதுமக்களுடன் மோடி உரையாடி வருவது அனைத்தும் கண் துடைப்புக்காக மட்டுமே எனவும் சவ்கதா ராய் குற்றம்சாட்டியுள்ளார். #NoConfidenceMotion
  ×