என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "nitiaayog"
நிதி ஆயோக் கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லியில் இன்று நடந்த நிதி ஆயோக்குழுக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கூடுதல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர்மேலாண்மை, குடிமராமத்து பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம்.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தை 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தவும், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி ஒழுங்காற்றும் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகள் வளம் பெறவும், வேளாண் விற்பனை கூடங்களை மேம்படுத்தவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று நடந்த நிதி ஆயோக்குழுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அம்மா 24.3.2012 அன்று விஷன் தமிழ்நாடு 2023 என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தார். அதில் அவர் வெளியிட்ட திட்டங்கள், நல்லாட்சி மற்றும் வளர்ச்சி மேம்பாடுகளை கொண்டது.
இந்தியாவில் மாநிலங்கள் கலாச்சாரம், பண்பாடு ரீதியாக மாறுபட்டு உள்ளது. எனவே அதற்கேற்ப மாநில அரசுகள் திட்டமிடவேண்டிய அவசியம் உள்ளது. அதற்கேற்ப மத்திய அரசு உதவிகள் செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து தர வேண்டும். தமிழ்நாட்டில் நீர்பாசன திட்டங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது.
2016-17ஆம் ஆண்டு ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாருவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி 30 மாவட்டங்களில் 1500 பணிகள் செய்யப்பட்டன. மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சமயத்தில் சில பரிந்துரைகளை தெரிவிக்க விரும்புகிறேன். நோபல் பரிசு வழங்கப்படுவது போல காந்தி பசுமை பூமி விருது வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள காந்தி கிராம ஊரக பல்கலைக்கழகத்தை ரூ.500 கோடியில் மேம்படுத்த வேண்டும்.
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து சீரமைக்க வேண்டும்.
தமிழகம் நீர்தேவைக்கு காவிரியை சார்ந்துள்ளது. எனவே காவிரி ஆணையத்தை உடனடியாக அமைத்து அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி. காரணமாக ரூ.6ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு தர வேண்டிய நிலுவைத் தொகைகள் இன்னமும் வழங்கப்படவில்லை
கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1804 கோடி தர வேண்டி உள்ளது. பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு இந்த நிலுவைத்தொகையை அனுமதிக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #nitiaayog #edappadipalanisamy
மாலைவரை நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், அனைத்து மாநில முதல் மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின்கீழ் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை பாதுகாப்பு கிடைக்கும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். நமது நாட்டில் திறமைகளுக்கும், வளங்களுக்கும் எந்த குறையும் இல்லை, கடந்த கால மத்திய அரசு தனது ஆட்சிக்காலத்தின் கடைசி நிதியாண்டில் அளித்ததைவிட மாநிலங்களுக்கு இந்த நிதியாண்டில் 6 லட்சம் கோடி ரூபாய் அதிகமாக அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். #NITIAayog #Modi #doubledigitsgrowth
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்