என் மலர்
இந்தியா

ஜப்பானை முந்தி உலகின் 4-வது பொருளாதார நாடாக மாறியது இந்தியா: நிதி ஆயோக் சிஇஓ
- சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி இந்தியா தற்போது ஜப்பானை முந்திவிட்டது.
- இந்தியா 4-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது என்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
அதன்பின், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா 4-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. நாம் நான்காவது பெரிய பொருளாதாரமாகி விட்டோம். 4 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.340 லட்சம் கோடி) பொருளாதாரமாகி விட்டோம்.
ஒட்டுமொத்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.
சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி இந்தியா தற்போது ஜப்பானை முந்திவிட்டது.
தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகள்தான் இந்தியாவை விட பெரிய பொருளாதார நாடுகளாக இருக்கின்றன.
திட்டமிட்டபடி, எண்ணியபடி உறுதியாக செயல்பட்டால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடுவோம் என தெரிவித்தார்.






