search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new chief secretariat case"

    புதிய தலைமை செயலக வழக்கில் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு பரிந்துரைத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #DMK #MKStalin #NewChiefSecretariatCase
    சென்னை:

    சென்னை அரசினர் தோட்டத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது.

    அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுபற்றி விசாரிக்க ரகுபதி ஆணையம் உருவாக்கப்பட்டது.

    இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின்படி ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிபதி புதிய தலைமை செயலக முறைகேடு பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அப்பீல் செய்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் முன்பு எடுத்து கொள்ளப்பட்டது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தனர். அதோடு இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.   #DMK #MKStalin #NewChiefSecretariatCase
    புதிய தலைமை செயலகம் தொடர்பான வழக்கில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. #DMK #HighCourt #MKStalin
    சென்னை:

    தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

    2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்த ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து மறைந்த முதல்வர் கருணாநிதி, தற்போதைய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று, அவற்றை பரிசீலித்து குற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.


    தனி நீதிபதி எஸ் எம்.சுப்பிரமணியத்தின் உத்தரவை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்பு ஸ்டாலின் தரப்பு வக்கீல் ஆஜராகி முறையிட்டார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுப்பதாக உத்தரவிட்டனர்.  #DMK #HighCourt #MKStalin
    ×