என் மலர்
நீங்கள் தேடியது "National Association of Teachers"
- குரு என்பவர் அஞ்ஞானம் எனும் இருளை நீக்கி ஞானம் எனும் ஒளியை தருபவர்.
- குரு என்பவருக்கு பற்பல பொருள் உண்டு.
திருப்பூர் :
தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில், குரு வணக்கம்' நிகழ்ச்சி கே.செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.இதில் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி பேசியதாவது:-
குரு என்பவர் அஞ்ஞானம் எனும் இருளை நீக்கி ஞானம் எனும் ஒளியை தருபவர். இறைவனையே குருவாகவும் வணங்குவது உண்டு.மீனவ சமுதாயத்தை சேர்ந்த வேத வியாசர் நான்கு வேதங்களையும் தொகுத்தவர் என்பதால் வியாச பூர்ணிமாவாகவும் விழா எடுப்பதுண்டு.குரு என்பவருக்கு பற்பல பொருள் உண்டு. குறிப்பிட்ட பாடத்தை கற்பிக்கும் தொழில் செய்பவர் உபாத்யாயர் என்றும், குறிப்பிட்ட பாடத்தில் தனது சிஷ்யனை நிபுணத்துவம் ஆக்குபவரை ஆச்சார்யர் என்றும் கூறப்படுவதுண்டு.மாணவர்களை சிறந்தவொரு குடிமகனாக மாற்றுவதிலும், அக்குடிமகன் மூலம் சமுதாயம் சிறந்த முறையில் வளர்ச்சியடையவும் ஆசிரியர்கள் பெரும் பங்காற்றுகின்றனர். கல்விக்கான ஆசிரியராக பணியாற்றி சமூகத்தை விழிப்புணர்வு அடைய செய்வது நம் ஒவ்வொருவரின் தலையாய பணியாகும்.இவ்வாறு அவர் பேசினார்.






