என் மலர்
நீங்கள் தேடியது "Multi purpose Building"
- ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டு கட்டிடத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
- கல்வி பயிலக்கூடிய மாணவர்களிடம் கல்வி கற்பிக்கப்படும் முறை, கல்வியின் தரம் குறித்து கலெக்டர் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் நல்லாங்குளம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் சத்துணவு திட்டத்தின் கீழ் ரூ.5.32லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிதாக கட்டப்பட்ட வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் கே.செட்டிகுளம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊரகவளர்ச்சித்துறை மூலம் சத்துணவு திட்டத்தின் கீழ் ரூ5.32லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வைப்ப றையுடன் கூடிய சமைய லறை கட்டிடத்தையும், பள்ளி கணித ஆய்வகங்க ளையும் ஆய்வு செய்து, அங்கு கல்வி பயிலக்கூடிய மாணவர்களிடம் கல்வி கற்பிக்கப்படும் முறை, கல்வியின் தரம் குறித்து கலெக்டர் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
செம்பட்டி ஊராட்சி பொய்யாங்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டு கட்டிடத்தையும் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர், உதவிப்பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
நெல்லை:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி ஒன்றியம், நாங்குநேரி கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சங்கனாங்குளம் பஞ்சாயத்தில் உள்ள சங்கனாங்குளம் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்நோக்கு கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, நாங்குநேரி கிழக்கு, மத்திய, மேற்கு வட்டாரம், பாளையங்கோட்டை தெற்கு வட்டாரம் ஆகிய வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் ரவீந்திரன் ராமஜெயம், வாகைதுரை, நளன், மற்றும் மாநில மகிளா காங்கிரஸ் மகளிரணி பொதுச்செயலாளர் குளோரிந்தால் சங்கனாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர், சின்ன தம்பி,
மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, வட்டார கிராம காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் வெள்ளசாமி, ஐசக் வாட்ஸ், வாலசுப்பிர மணியன், வடிவேல், சிதம்பரம், சண்முகம், ஜெயசீலன், சுந்தர் புஷ்பராஜ் மாணிக்கம், பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் கவுன்சிலர் தெய்வாணை, மற்றும் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கட்சி நிர்வாகிகள், சங்கனாங்குளம் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டார்கள்.






