search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "modern technology"

    • வாஸ்து பிரகாரம் சாலையை விட வீடு பள்ளமாக இருக்கக் கூடாது என்பதால் வீட்டை எடுத்துவிட்டு புதியதாக கட்டலாம் என திட்டமிட்டோம்.
    • நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக சுதாகர் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம்

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கள்ளிப்பாளையம் திட்டமேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர்( 45 ). விவசாயி. இவர் கடந்த 20 வருடத்திற்கு முன்பு கட்டிய வீடு தற்போது பள்ளத்தில் இருப்பதால் வீட்டை இடிக்க மனமின்றி அதை உயர்த்த நவீன தொழில்நுட்ப மூலம் தனது வீட்டை வானங்களுக்கு பயன்படுத்தும் ஜாக்கிகள் மூலம் 3 அடி உயரம் தூக்கி கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து வீட்டின் உரிமையாளர் சுதாகர் கூறியதாவது:-

    எங்களது பூர்வீக இடத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் புது வீடு கட்டினோம். கீழ்த்தளம் 2000 சதுர அடியில் கட்டப்பட்டது. தற்போது சாலை உயரமாகி போய் வீடு பள்ளமானது. மேலும் வாஸ்து பிரகாரம் சாலையை விட வீடு பள்ளமாக இருக்கக் கூடாது என்பதால் வீட்டை எடுத்துவிட்டு புதியதாக கட்டலாம் என திட்டமிட்டோம். மேலும் பழைய வீட்டை இடிக்க மனம் இல்லாததால் மிகவும் குழம்பிப்போனோம்.

    அப்போது கரூரை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது, அப்போது வீட்டை இடிக்காமல் பெயர்த்து வாகனங்களுக்கு டயர் மாற்ற பயன்படுத்தும் ஜாக்கிகளை பயன்படுத்தி தேவையான உயரத்துக்கு மாற்றி அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறினார். உயரமாக்கப்பட்டு கட்டப்படும் சில வீடுகளில் நேரில் சென்று பார்த்து அதிசயத்தோம். தற்போது எங்கள் வீட்டையும் அதே தொழில்நுட்பம் மூலம் மூன்றடிக்கு உயர்த்தி வருகிறோம். இவ்வாறு கூறினார்.

    இந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் சென்னையைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் சுந்தரமூர்த்தி என்பவர் கூறியதாவது:- ஜாக்கிகள் மூலம் பழைய வீடுகளை தரை மட்டத்திலிருந்து பெயர்த்து தேவையான அளவு உயர்த்தும் கட்டிட தொழில்நுட்ப முறையை நாங்கள் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக சுதாகர் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம். கடந்த 1-ந் தேதி பணிகளை தொடங்கினோம்.

    இன்னும் 30 நாட்களில் பணிகள் முடிந்து விடும். கட்டிடத்தை உயர்த்த ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். மேலும் கட்டடத்துக்கு ஏற்ற போல் 600 ஜாக்கிகள் வரை பயன்படுத்துகிறோம். தற்போது இந்த கட்டிடத்திற்கு 175 ஜாக்கிகள் மூலம் உயர்த்தி வருகிறோம்.

    வீட்டை தூக்கும் நவீன தொழில்நுட்ப முறை பரமத்திவேலூர் தாலுகா கள்ளிப்பாளையம் திட்டமேட்டில் உள்ள சுதாகர் வீட்டில் 15 பேர் கொண்ட குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். 2000 சதுர அடி, 40 டன் எடை கொண்ட அவரின் வீட்டை தரை மட்டத்திலிருந்து 3 அடி உயர்த்தி வருகின்றனர். முதலில் சுவர்களில் இருபுறம் தோண்டி. அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக ஜாக்கிகள் வைக்கின்றனர்.

    அந்த வீட்டிற்கு 175 ஜாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, தேவையான உயரத்துக்கு 15 பேரும் ஒரே நேரத்தில் ஜாக்கிகளை இயக்கி உயர்த்துகின்றனர். தயாரிக்கப்பட்ட சிமெண்ட் செங்கல்களை வைத்து கட்டுகின்றனர் .இந்த முறையில் வீட்டில் தரைத்தளம் மட்டும் சேதம் அடைகிறது. சுவர்களில் விரிசல் கூட விழுவதில்லை. 3 அடி வரை உயர்த்துவதற்கு ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றோம். தற்போது பணி நடைபெறும் இந்த கட்டிடம் புதிதாக கட்டினால்ரூ 40 லட்சம் வரை செலவாகும். தற்போது உயரம் தூக்கி கட்ட 5 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை செலவாகும் என திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்.ஓ., முறையில் கழிவுநீரில் இருந்து சுத்தமான தண்ணீர் 80 சதவீதம் பிரித்து எடுக்கப்படுகிறது.
    • சாய ஆலைகளில் மட்டும் அகற்றப்படாத உப்பு 4 லட்சம் டன் அளவுக்கு தேங்கியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் சாய ஆலைகளுக்கு ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் வருவதற்கு முன்னரும், பின்னரும் பெரும் சவாலாக இருப்பது உப்பு. எதிர்பார்த்த நிறத்தில் தரமாக சாயமிட உப்பு கட்டாயமாகிவிட்டது. ஒரு கிலோ துணிக்கு 15 கிராம் வரை உப்பு சேர்க்கப்படுகிறது.

    சாயக்கழிவு வெளியேற்றியதில் அதிக அளவு உப்புத்தன்மை இருந்ததால் சுற்றுச்சூழல் பாழாகிவிட்டது. அதற்காகவே திருப்பூருக்கு மட்டும் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டது. திருப்பூர் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் முதல்கட்ட சாயக்கழிவு சுத்திகரிப்பில் கலர், துர்நாற்றம் நீக்கப்படுகிறது. ஆர்.ஓ., முறையில் கழிவுநீரில் இருந்து சுத்தமான தண்ணீர் 80 சதவீதம் பிரித்து எடுக்கப்படுகிறது.

    மீத கழிவில் இருந்து 10 சதவீதம் வரை மிக்சர் சால்ட் என்ற கழிவுகள் கலந்த உப்பு பிரித்து வைக்கப்படுகிறது. மீதியுள்ள 10 சதவீத தண்ணீர் உப்புத்தன்மை நிறைந்த 'பிரெய்ன் சொல்யூஷன்' என்ற பெயரில் பிரித்து எடுக்கப்படுகிறது. சாயக்கழிவுநீரில் இருந்து உப்பு மற்றும் 'பிரெய்ன் சொல்யூஷன்' பிரித்து எடுக்க லிட்டருக்கு 25 முதல் 40 பைசா வரை செலவாகிறது. இந்நிலையில் சாய ஆலைகள் பயன்பாட்டுக்காக உப்பு இல்லாமல் சாயமிடும் 'சொல்யூஷன்' ஒன்றை கோவை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் கூறுகையில்,

    சாய ஆலைகளில் மட்டும் அகற்றப்படாத உப்பு 4 லட்சம் டன் அளவுக்கு தேங்கியுள்ளது. உப்பு கலந்த கழிவுநீரை சுத்திகரிக்க பெரும் செலவாகிறது. இப்பிரச்சினைகளை தவிர்க்க உப்பு இல்லாத சாயமிடல் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. சால்ட் ப்ரீ டையிங் என்ற எஸ்.எப்.டி., தொழில்நுட்பத்தில் சாயமிடுவதற்கு முன்பாக சொல்யூஷன் ஒன்றை சாயமிடும் எந்திரத்தில் பயன்படுத்த வேண்டும்.

    பிறகு வழக்கம் போல் சாயமிடலாம். உப்பு தேவையே இல்லை. பெருந்துறை, கரூர், திருப்பூர் சாய ஆலைகளில் வெற்றிகரமாக சோதனை நடத்தி பார்த்துள்ளோம். விரைவில் சாய ஆலை உரிமையாளர் சங்கத்துடன் பேசி புதிய தொழில்நுட்பத்தால் உப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வழிவகை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • சோலார் பேனல் மற்றும் வால்வு பொருத்தும் பணி நடந்து வருகிறது.
    • கம்ப்யூட்டர் உதவியுடன் அறித்து அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடியும்.

    அவினாசி,

    அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட உள்ளது. அவிநாசி நகரப்பகுதியில் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவச்சேரி, சாலைப்பாளையம் பகுதியிலுள்ள குளம், குட்டைகளில், அவுட்லெட் சென்சார் சிஸ்டம்எனப்படும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

    இதற்கான சோலார் பேனல் மற்றும் வால்வு பொருத்தும் பணி நடந்து வருகிறது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குளத்தில் ஏற்கனவே உள்ள தண்ணீரின் அளவு, திட்டத்தின் படி திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரின் அளவு ஆகியவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் அறித்து அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடியும். குழாயில் ஆங்காங்கே ஏற்படும் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை சரி செய்யும் போது, குழாய்கள் நீரோட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி பணி செய்ய வால்வு பொருத்தப்பட்டுள்ளது என்றனர்.

    ×