search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minivan"

    • தீர்த்த குளம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து மினிவேனை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
    • திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று கொண்டிருந்த தியாகி சண்முகம் பிள்ளை வீதியில் ,மூர்த்தி ஓட்டிவந்தமினிவேன் பாதாள சாக்கடையில் தலைக்குப்புற கவிழ்ந்து.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தியாகி சண்முகம் பிள்ளை வீதிக்கு ஆயில் லோடு ஏற்றுக்கொண்டு மினி வேன் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த லோடு மினி வேனை திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியை சேர்ந்த மூர்த்தி ஓட்டிக்கொண்டு வந்தார்.திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. தியாகி சண்முகம் பிள்ளை வீதியில் வேன் வந்த போது பாதாள சாக்கடையில் மினி வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் மூர்த்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியில் மூடப்பட்ட பள்ளத்தில் பல்வேறு வாகனங்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    • சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் கமல் (வயது35).
    • ஆனந்தபுரம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஒரு மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் கமல் (வயது35).

    மினிலாரி மோதி விபத்து

    இவரது நண்பர் தெற்கு புளியங்குளத்தை சேர்ந்த விஜயகுமார் (21). இவர்கள் இருவரும் சென்னையில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் இவர்களது மற்றொரு நண்பரான வாசுதேவன் என்பவரது அண்ணன் திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தனர்.

    தொழிலாளி பலி

    நேற்று திருமணத்தில் கலந்து கொண்டு மாலையில் நண்பர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கருவேலங்காட்டில் இருந்து சாத்தான்குளத்திற்கு சென்றனர்.

    ஆனந்தபுரம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஒரு மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நண்பர்கள் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் கமல் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×