search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "millet cotton milk"

    • உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஊட்டம்தரும்.
    • உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவு.

    தினையில் உள்ள மாவுச்சத்து, குழந்தைகள் மற்றும் அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. தினையில் புரதச்சத்து அதிகம் உள்ளதால், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவு. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஊட்டம்தரும் தினை பருத்தி பால் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    தினை அரிசி மாவு- 50 கிராம்

    பருத்தி விதை- 200 கிராம்

    கருப்பட்டி- 150 கிராம்

    உப்பு- 1 சிட்டிகை

    ஏலக்காய்தூள்- சிறிது

    சுக்குத் தூள்- சிறிது

    செய்முறை:

    சுத்தமான பருத்தி விதையை 10 முதல் 12 மணி நேரம் ஊறவைத்து நன்றாக அலச வேண்டும். அதில் உள்ள பஞ்சுகள் அனைத்தும் நீங்கும் அளவிற்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அதனை அரைத்து பால் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும் இரண்டு, மூன்று முறை பால் எடுக்க வேண்டும்.

    கருப்பட்டியை நீரில் கரைத்து வடிக்கட்டி கொதிக்க வைக்க வேண்டும் இதனுடன் பருத்திப் பாலை சேர்த்து கொதித்து வந்ததும், தினை அரிசிமாவை கரைத்து அதில் ஊற்ற வேண்டும். தீயை குறைத்து வைத்து நிதானமாக கைவிடாமல் 3 நிமிடம் கிளற வேண்டும்.

    இப்போது ஏலக்காய் தூள், சுக்குத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தூவி இறக்கவும். இப்போது தினை பருத்திப்பால் தயார். காலையில், மாலையில் உடற்பயிற்சி செய்வதற்கு அரை மணிநேரம் முன்பாக இந்த திணை பருத்திப்பாலை அருந்திவர ஊட்டச்சத்து உடலில் சேரும். சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

    ×