என் மலர்
நீங்கள் தேடியது "Melshanthi Exam"
- குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலைமை அர்ச்சகர் தேர்வு.
- அக்டோபர் 1-ந்தேதி பதவியேற்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலைமை அர்ச்சகர் (மேல்சாந்தி) தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதம் முதல் செயல்படும் புதிய தலைமை அர்ச்சகர் தேர்வு கோவிலில் நடந்தது.
தற்போதைய மேல்சாந்தி சிவகரன் நம்பூதிரி, கோவில் அருகே உள்ள நமஸ்கார மண்டபத்தில் சீட்டு போட்டு புதிய மேல் சாந்தியை தேர்வு செய்தார். அதன்படி பாலக்காடு அருகே உள்ள தெக்கே வாவனூரைச் சேர்ந்த ஸ்ரீநாத் நம்பூதிரி புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அக்டோபர் 1-ந்தேதி பதவியேற்கிறார்.






