என் மலர்
நீங்கள் தேடியது "Melmalayanur Angalaman Temple"
- அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும்.
- மூலவர் சுயம்பு புற்று மண்ணால் உருவானவள்.
1. அங்காளபரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும்.
2. மூலவர் சுயம்பு புற்று மண்ணால் உருவானவள். அங்காளம்மன் 4 திருக்கரங்களுடன் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள்.
3.நான்கு கரங்களில் உடுக்கை, சூலம், கிண்ணம், கத்தி உள்ளது. தலைக்கு பின்னால் தீப்பிழம்பு உள்ளது.
4. இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு, காலுக்கு அடியில் கபாலம் உள்ளது. ஐந்து தலை நாகத்தின் கீழ் அன்னை அருளாட்சி புரிகிறாள்.
5. கோவிலுக்கு 4 நுழைவு வாயில்கள் உள்ளன. பக்தர்கள் வடக்கு நுழை வாயிலை பிரதான நுழைவு வாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.

6. கோபால விநாயகர் தென்பகுதியில் அமைந்துள்ள பெரியாயி சன்னதி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு மற்றும் ஏரிக்ரையில் அமர்ந்துள்ள துர்கையம்மன் ஆலயம் போன்றவைகளாகும்.
7. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அங்காளம்மன் புற்றாக அமர்ந்ததாக நம்பப்படுகிறது. இப்புற்றானது அளவில் பெரியதாக உள்ளது.
8. இக்கோவிலில் இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. அப்படி நடைபெறும் போது அவ்வபோது இப்புற்றில் அம்மன் வடிவமாக நாகத்தை பலர் பார்த்ததாக சொல்லப்படுகிறது.
9. பூஜையின் போது சக்தி வாய்ந்த புற்று மண்னை பூஜை தண்ணீரில் கலந்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.
10. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜையில் கலந்துக் கொண்டு புற்றுமண் கலந்த நீரை அருந்தினால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
11. கோவிலின் தெற்கு பகுதியில் மல்லாந்து படுத்து பெரிய உருவமாக பெரியாயி அருள் புரிகிறாள்.
12. பெரியாயி அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகள் விலகுவதுடன் வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
13. சிவபெருமானுக்கே பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடமாக கருதப்படும் சுடுகாடானது மயானக் கொள்ளை நடைபெறும் பகுதியாகும்.
14. இந்த இடத்தில் வழிபடும் பக்தர்களுக்கு பிடித்திருக்கும் அனைத்து பிணிகளும் நீங்கி அம்மன் அருளால் நலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

15. அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். பவுர்ணமி தினங்களில் ஆலயம் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படுகிறது.
16. சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. அம்மனை குலதெய்வமாக வழிபடுவோர், பொங்கல் வைத்து படையலிட்டு வேண்டுகின்றனர்.
17.வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் ஆடு மாடு மற்றும் கோழிகளை வடக்கு வாசலில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் சுற்றி விடப்படுகிறது.
18.ஆண்டுதோறும் திருவிழாவில் புதிய தேரில் அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.
19.எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளதோ அங்கெல்லாம் மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெறும்.
20. மாசி மாதம் மயானக் கொள்ளை திருவிழா பெரிய அளவில் நடக்கும். பக்தர்கள் தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அம்மனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள்.

21. மயானத்தில் அன்னையை ஆராதிக்கின்றார்கள், பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். காண்போர் வியக்கும் வண்ணம் பூஜை செய்கிறார்கள்.
22.இதனால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாது நம்பிக்கையாக உள்ளது.
- ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்க வசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சர்வ லோகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காள பரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.
இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியில் இருந்தும் மேல் மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.






