search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "May apply"

    • சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிகுழு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெண்களின் பொருளாதார மேம்பாடு என்பது வலுவான மற்றும் சமத்துவ சமுதாயத்தை வளர்ப்பதற் கான அடிப்படையாகும், வறுமை ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் ஒட்டு மொத்த கிராமப்புற பொருளாதார மேம்பாடு ஆகியற்றிற்காக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    எனவே, ஊட்டச்சத்து குறைபாடு அற்ற சமுதாயத் தை உருவாக்கும் பொருட்டு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் புதிய பாதையை உருவாக்கி வருகிறது.

    மேலும், சர்வதேச சிறு தானிய ஆண்டாக 2023-ம் ஆண்டு கொண்டாடப்படுவதால் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட கலெக்டர் வளாகத்திலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறு தானிய உணவகம் அமைத் திட கீழ்க்கண்ட நிபந்தனை களுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிறுதானிய உணவகம் நடத் திட கீழ்க்காணும் தகுதியுள்ள மற்றும் விரும்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகளி லிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது.

    அதன்படி மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். தேசிய ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

    கூட்டமைப்பாக இருக் கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு சான்று பெற் றிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு அல்லது கூட்ட மைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுப வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் விவரங் களுக்கு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தை சேர்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள்குறை தீர்க்கும் கூட்டரங்கில் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

    ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் உள்ள குறைகளை குறிப்பிட்டு, கலெக்டருக்கு கீழ்கண்ட விபர குறிப்புகளுடன் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    மனுவின் மீது ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மனு என்று குறிப்பிட வேண்டும். விண்ணப்பம் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கண்டிப்பாக இரு நகல்கள் அனுப்பப்பட வேண்டும். ஓய்வூதியர் பெயர் (குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தால் உறவுமுறை) குறிப்பிடப்பட வேண்டும்.

    ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வந்தால் அவை சம்பந்தமான விபரம், ஓய்வூதிய புத்தக எண் மற்றும் கருவூலத்தின் பெயர் ஆகியவை குறிப்பிட வேண்டும். ஓய்வூதியப் பிரேரணை சென்னை மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருந்தால் அதன் விபரம் குறிப்பிட வேண்டும். ஓய்வூதிய பலன்கள் பெறுவது தொடர்பான கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து விண்ணப்பிக்கவும், கோரிக்கையின் விபரம் தெளிவாக குறிப்பிட வேண்டும். ஓய்வூதியதாரர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய அலுவலர் மற்றும் அலுவலகத்தின் முழு முகவரி, தொலைபேசி எண்ணுடன் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். பிற மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் ஓய்வூதியர் குறை தீாக்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு துறைகளில் இருந்து ஓய்வூதியப் பிரேரணை அனுப்புவதில் ஏற்படும் தாமதம் மற்றும் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் விவாதித்து குறைகளை களைய விரைந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் மதுரை மாவட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பதிலளிக்க உள்ளனர்.

    எனவே 30-ந்தேதி நடைபெற உள்ள ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு 15-ந்தேதிக்குள் மனு செய்துள்ள ஓய்வூதியதாரர்கள், அன்றைய தினம் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கிஸ் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    சுதந்திர தினவிழா ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2022-23-ம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பெண்களின் முன்னேற்ற த்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற் கான விருது கள் வழங்கப்பட உள்ளது. எனவே கீழ்க்கா ணும் தகுதியான நபர்களி டமிருந்து கருத்து ருக்கள் வருகிற 30-ந் தேதிக்குள் வரவேற்கப்படு கின்றன.

    தமிழ்நாட்டை பிறப்பிட மாகக் கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணி யாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

    மேற்காணும் வகையில் சாதனை புரிந்தவர்களாக இருப்பின் உரிய கருத்துருவுடன் மாவட்ட சமூகநல அலுவலகம், ராமநாதபுரம் (மாவட்ட கலெக்டர் வளாகம்) அணுகி இணைப்பு படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி வழங்க வேண்டும். மேலும் தகவலுக்கு தொலைபேசி எண் 04567-23046 தொடர்பு கொள்ளவும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கிஸ் தெரிவித்தார்.

    ×