என் மலர்

  நீங்கள் தேடியது "Manappadu"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணப்பாடு கடற்கரை ஓரத்தில் மணலும் கல்லும் சேர்ந்த சுமார் 50 அடி உயரத்தில் மணல் குன்றுஉள்ளது.
  • திருவிழாவில் முக்கிய நாளான நேற்றும், இன்றும் மக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

  உடன்குடி:

  தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணப்பாடு ஊராட்சி கடற்கரை ஓரத்தில் மணலும் கல்லும் சேர்ந்த சுமார் 50 அடி உயரத்தில் மணல் குன்றுஉள்ளது.

  மகிமை பெருந்திருவிழா

  இந்த குன்றின் மீது அமைந்துள்ள திருச்சிலுவை நாதர் திருத்தலத்தின் 444 வது ஆண்டு மகிமை பெரும்திருவிழா கடந்த4-ந் தேதி காலை 7.30 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு திருவிழா தொடங்குகியது.

  நிகழ்ச்சியில்அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கி, மெய்யான திருச்சி லுவை ஆசீர்வழங்கி, மறையுறை நிகழ்த்தி அனைவருக்கு அப்பம் வழங்கினார். இதில் ஊர் மக்கள் அனைவரும், குடும்பத்துடன் கலந்து கொண்டனர்,

  திருவிழா தொடங்கியதை யொட்டி தினசரி காலை திருப்பலியும், மற்றும் பல்வேறு சபை சார்பில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன, விழாவின் முக்கிய நாட்களான நேற்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6,30 மணிக்குதூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகைக்குசிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு பெரும் விழா மற்றும் மாலை ஆராதனை சிறப்பு மறையுறை, மெய்யான திருச்சி லுவை ஆசீர் நடந்தது, இன்று (வியாழக்கிழமை) மகிமைபெரு விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு திருப்பலி. 5 மணிக்கு மலையாள திருப்பலியும்.6 மணிக்கு திருத்தலத்தை சுற்றி வந்து, மகிமைபெரும்விழா நிகழ்ச்சி .புதியசபையினர் தேர்வு செய்தல், உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

  தமிழ்நாடு- கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிகாலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

  இன்று மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர் மற்றும் மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல் நடக்கிறது மாலை 5 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

  சிறப்பு பஸ்கள்

  திருவிழாவில் முக்கிய நாளான நேற்றும், இன்றும் பல மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கேரளாவில் இருந்தும் இறைமக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

  மேலும் ஏராளமான மக்கள் கார், பஸ்,வேன் போன்ற வாகனங்களில் குடும்பத்துடன் வந்து 2நாள் தங்கியிருந்து திருப்பலியில் கலந்து கொன்டனர், மலையாள மக்களுக்கு தனியாக மலையாள திருப்பலி நடத்தப்பட்டது, இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மணப்பாடு புனித யாகப்பர் பங்குத் தந்தையர்கள் மற்றும் விழாக்குழுவினர் ஊர் மக்கள் செய்து இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணப்பாடு புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் முதல் இடத்தையும், எரிபந்து போட்டியில் 2-ம் இடத்தையும் பெற்றனர்.
  • தனிநபர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவன் அண்டன் பிரபாகரன் முதல் இடத்தை பிடித்தார்

  உடன்குடி:

  திருச்செந்தூர் வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மணப்பாடு புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் முதல் இடத்தையும், எரிபந்து போட்டியில் 2-ம் இடத்தையும் பெற்றனர். தனிநபர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவன் அண்டன் பிரபாகரன் முதல் இடத்தையும், கோலுன்றித் தாண்டுதல் போட்டியில் ஆலன் ஷெல்லி முதல் இடத்தையும், அண்டன் பிரபாகரன் 2ம் இடத்தையும் பெற்றனர்.

  குண்டு எரிதல் போட்டியில் கரோஸ் 3-ம் இடத்தையும். மாணவர் ஜெபிசன் உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் போட்டிகளில் 3-ம் இடத்தையும் கஜுல் மும்முறை தாண்டுதல் போட்டியில் 3 ம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிப் பேரவையில் சான்றிதழ்களையும், பரிசுகளையும், பதக்கங்களையும் வழங்கியதோடு பயிற்சியளித்த அருட்சகோதரர் ரஷ்யன் உடற்பயிற்சிஆசிரியை உஷா வெற்றி பெற்ற மாணவர்களைபள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் அருள் பர்னாந்து மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள். பள்ளித் தாளாளர் லெரின் டிரோஸ் ஆகியோர் வாழ்த்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணப்பாடு மீனவ கிராமத்தில் கடலில் ஏற்பட்ட மணல் அரிப்பின் காரணமாக மணல் திட்டுகள் உருவாகி கடலுக்குள் படகை செலுத்த முடியாமல் மீனவர்கள் கடும் அவதிபட்டு வந்தனர்
  • முதல் கட்டமாக கடலுக்குள் பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடந்து வருகிறது.

  உடன்குடி:

  உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மணப்பாடு மீனவ கிராமத்தில் கடலில் ஏற்பட்ட மணல் அரிப்பின் காரணமாக மணல் திட்டுகள் உருவாகி கடலுக்குள் படகை செலுத்த முடியாமல் மீனவர்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.

  இதன் காரணமாக படகுகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் ஜே.சி.பி. வழங்கி கடலில் ஏற்பட்ட மணல் திட்டை தொடர்ந்து அகற்றி வந்தார். இதனையடுத்து மீனவர்கள் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ரூ.48கோடி மதிப்பீட்டில் தூண்டில் பாலம் அமைக்கும் பணி மணப்பாட்டில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கடலுக்குள் பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடந்து வருகிறது.

  இதனை தமிழக மீன்வளம், மீனவர்நலத்துறை மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ஆய்வு மேற்கொண்டார்.

  ஆய்வின் போது உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மணப்பாடு ஊராட்சிதலைவர் கிரேன்சிட்டா, மாவட்ட பிரதிநிதி மணப்பாடு ஜெயபிரகாஷ், உடன்குடி யூனியன் கவுன்சிலர் லெபோரின், நாட்டு படகு மீனவ சங்கதலைவர் கயஸ், ஊர்த்தலைவர் பியூஸ், தூயஆவி பங்கு கமிட்டி தலைவர் சந்திரா, வியாகப்பர் ஆலய கமிட்டி தலைவர் சிபூர்சியான், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, முன்னாள் கவுன்சிலர் பிரதீபன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சந்தையடியூர் ரவிராஜா, இளைஞர் அணி பயாஸ், அஜய் மற்றும் ஊர் நல கமிட்டியினர், ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  இது தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் கூறும்போது, 30 ஆண்டுகால எங்களது கோரிக்கையை அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் நிறைவேற்றியுள்ளார் விரைந்து இப்பணியை முடித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

  ×