search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தின் மகிமை பெருந்திருவிழா-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    X

    திருப்பலியில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

    மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தின் மகிமை பெருந்திருவிழா-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    • மணப்பாடு கடற்கரை ஓரத்தில் மணலும் கல்லும் சேர்ந்த சுமார் 50 அடி உயரத்தில் மணல் குன்றுஉள்ளது.
    • திருவிழாவில் முக்கிய நாளான நேற்றும், இன்றும் மக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணப்பாடு ஊராட்சி கடற்கரை ஓரத்தில் மணலும் கல்லும் சேர்ந்த சுமார் 50 அடி உயரத்தில் மணல் குன்றுஉள்ளது.

    மகிமை பெருந்திருவிழா

    இந்த குன்றின் மீது அமைந்துள்ள திருச்சிலுவை நாதர் திருத்தலத்தின் 444 வது ஆண்டு மகிமை பெரும்திருவிழா கடந்த4-ந் தேதி காலை 7.30 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு திருவிழா தொடங்குகியது.

    நிகழ்ச்சியில்அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கி, மெய்யான திருச்சி லுவை ஆசீர்வழங்கி, மறையுறை நிகழ்த்தி அனைவருக்கு அப்பம் வழங்கினார். இதில் ஊர் மக்கள் அனைவரும், குடும்பத்துடன் கலந்து கொண்டனர்,

    திருவிழா தொடங்கியதை யொட்டி தினசரி காலை திருப்பலியும், மற்றும் பல்வேறு சபை சார்பில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன, விழாவின் முக்கிய நாட்களான நேற்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6,30 மணிக்குதூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகைக்குசிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு பெரும் விழா மற்றும் மாலை ஆராதனை சிறப்பு மறையுறை, மெய்யான திருச்சி லுவை ஆசீர் நடந்தது, இன்று (வியாழக்கிழமை) மகிமைபெரு விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு திருப்பலி. 5 மணிக்கு மலையாள திருப்பலியும்.6 மணிக்கு திருத்தலத்தை சுற்றி வந்து, மகிமைபெரும்விழா நிகழ்ச்சி .புதியசபையினர் தேர்வு செய்தல், உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    தமிழ்நாடு- கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிகாலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர் மற்றும் மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல் நடக்கிறது மாலை 5 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    சிறப்பு பஸ்கள்

    திருவிழாவில் முக்கிய நாளான நேற்றும், இன்றும் பல மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கேரளாவில் இருந்தும் இறைமக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

    மேலும் ஏராளமான மக்கள் கார், பஸ்,வேன் போன்ற வாகனங்களில் குடும்பத்துடன் வந்து 2நாள் தங்கியிருந்து திருப்பலியில் கலந்து கொன்டனர், மலையாள மக்களுக்கு தனியாக மலையாள திருப்பலி நடத்தப்பட்டது, இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மணப்பாடு புனித யாகப்பர் பங்குத் தந்தையர்கள் மற்றும் விழாக்குழுவினர் ஊர் மக்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×