search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry driver arrested"

    • விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
    • பார்க்கிங் விளக்கு போடாமலும், கவன குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியதால் விபத்து நேரிட்டதும் தெரியவந்தது.

    சங்ககிரி:

    சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டு தெருவில் வசித்து வருபவர் ராஜதுரை (வயது 28). இவர் சேலம் மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா ஈங்கூர் குட்டப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகள் பிரியாவுக்கும் (25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு பிரியாவுக்கும், கணவர் ராஜதுரைக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மருமகனையும், மகளையும் சமாதானம் செய்து வைக்க அன்று இரவே ஈங்கூர் குட்டப்பாளையத்தில் இருந்து பிரியாவின் தந்தை பழனிசாமி (50), தாயார் பாப்பாத்தி(45), தாய்மாமா ஆறுமுகம் (49), அவருடைய மனைவி மஞ்சுளா (38), தாய்மாமன் மகன் விக்னேஷ் (20), மற்றொரு மாமன் செல்வராஜ் (55) ஆகியோருடன் ஆம்னி காரில் சேலத்துக்கு வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

    அப்போது பிரியா ஒரு வாரம் தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து தனது குழந்தையுடன் பிரியா ஆம்னி வேனில் புறப்பட்டார். ஆம்னி வேனை விக்னேஷ் ஓட்டினார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூர் பைபாஸில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியது. இதில் பழனிசாமி, பாப்பாத்தி, ஆறுமுகம், மஞ்சுளா, செல்வராஜ், குழந்தை சஞ்சனா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். பிரியா, விக்னேஷ் பலத்த காயம் அடைந்தனர். இருவருக்கும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள ஒரு சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது.

    விசாரணையில் லாரி டிரைவர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தேவாரப்பள்ளி தாலுகா சின்னாக்கவுண்டா கிராமத்தை சேர்ந்த ஜெகன்பாபு (25) என்பதும், அவர் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், பின்னால் வரும் வாகனங்களுக்கு தெரியப்படுத்த பார்க்கிங் விளக்கு போடாமலும், கவன குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியதால் விபத்து நேரிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் லாரி டிரைவரை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் லாரியையும், டிரைவரையும் தேடி வந்தனர்.

    கோவை அருகே சாய்பாபா காலனி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் ஜெகன் பாபு லாரியை ஓட்டி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை மடக்கி பிடித்து லாரியை பறிமுதல் செய்து சங்ககிரி போலீஸ் நிலையம் கொண்டு வந்து நிறுத்தினர்.

    இதையடுத்து ஜெகன் பாபு மீது அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்தியது, விபத்து நடக்கும் என்பதை தெரிந்தே வாகனத்தை நிறுத்துவது, விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்யாமல் வாகனத்தை எடுத்து செல்லுதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    தொடர்ந்து ஜெகன் பாபுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் ஆஸ்பத்திரியில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாலிபர் ஒருவர் மாணவியிடம் பேச்சு கொடுத்து அருகில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
    • இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த கச்சனங்குப்பம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் பேச்சுகொடுத்து அருகில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி விசாரணை நடத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான செந்தில் என்பவரை கைதுசெய்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இண்டூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மண் கடத்தி வந்த லாரி டிரைவரை கைது செய்தனர்.
    இண்டூர்:

    தர்மபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் தருமபுரி-பென்னாகரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக அனுமதியின்றி டிப்பர் லாரியில் செம்மண் கடத்தி வந்த டிரைவர் முருகன் (வயது 39), லாரியின் உரிமையாளர் முனுசாமி ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள முனுசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். பின்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.      
    ×