என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Load lifting workers"

    • சிப்காட் வளாக பகுதியில் டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகம் மற்றும் குடோன் இயங்கி வருகின்றது.
    • கூலி வழங்குவதில் அடாவடி வசூல் என சரமாரி புகார்.

    கடலூர்: 

    கடலூர் முதுநகர் அடுத்த சிப்காட் வளாக பகுதியில் டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகம் மற்றும் குடோன் இயங்கி வருகின்றது. இந்த டாஸ்மாக் குடோன் மூலம் மது பாட்டில்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் இறக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு பெட்டிக்கு 7 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒரு சிலர் இவர்களுக்கு கூலியாக வழங்கக்கூடிய 7 ரூபாயிலிருந்து 3 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி பணத்தை வசூல் செய்வதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது தொடர்பாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட உயர் அதி காரியிடம் புகார் அளித்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை 60-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழி லாளர்கள் திடீரென்று டாஸ்மாக் குடோன் முன்பு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத்தகவல் அறிந்த போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமை தூக்கும் தொழி லாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதமாக இதே நீடித்து வருவதால் எங்கள் கோரிக்கையை நிரந்தரமாக தீர்க்கும் வரை எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக் கூறி தொடர்ந்து போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக டாஸ்மாக் குடோனில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்கள் ெகாண்டு செல்லும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் போராட்டம் நீடித்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது.
    • ரூ.700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடப்பதால் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் உள்ள லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன்களில் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    6 வருடங்களாக கூலி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஈரோடு பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.

    இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் சரக்கு லாரி புக்கிங் சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று தினம் மாலையில் நடைபெற்றது.

    இதில் இரு தரப்பினரும் தங்களது தரப்பு விளக்கத்தை அமைச்சரிடம் தெரிவித்தனர். இருதரப்பு விவரங்களையும் கேட்டறிந்த பிறகு லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் தரப்பில் 6 பேரும், தொழிற்சங்க நிர்வாகிகள் 6 பேரும் பொது நபராக ஒரு வக்கிலும் என 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் இந்த குழுவின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இந்த குழுவினர் நேற்று அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொழிற்சங்கம் சார்பிலும், லாரி டிரான்ஸ்போர்ட் சார்பிலும் அமைக்கப்பட்ட குழுவில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது லாரி டிரான்ஸ்போர்ட் நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் கேட்ட ஊதிய உயர்வில் இருந்து பாதி தருவதாக கூறினர்.

    ஆனால் முழு தொகையை வழங்க வேண்டும் என்று தொழிலா ளர்கள் வலியுறுத்தினார். இதனால் பேச்சு வார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியாக இருப்பது.

    இதனையடுத்து இன்று மாலை மீண்டும் இரு தரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது.

    இன்று ஸ்டார் தியேட்டர் அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்ட தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் ஈரோட்டில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், எண்ணெய் வகைகள் அனுப்ப முடியாமல் குடோன்களில் தேங்கி இருக்கின்றன.

    கிட்டத்தட்ட ரூ.700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடப்பதால் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

    இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படுமா? என எதிர்பா ர்க்கப்படுகிறது.

    ×