search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lion air flight"

    இந்தோனேசியாவில் லயன் ஏர் பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 189 பேரும் உயிரிழந்த நிலையில் 9 பேரின் உடல்கள் கரை ஒதுங்கின. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு நேற்று காலை 6.20 மணிக்கு ‘லயன் ஏர் பேசஞ்சர்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. 13-வது நிமிடத்தில் அந்த விமானம் திடீரென மாயமாகி கடலில் விழுந்து நொறுங்கியது.

    விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 2 கைக் குழந்தைகள் மற்றும் இந்திய விமானி கேப்டன் பவ்வி சுனேஜா உள்ளிட்ட மற்றொரு விமானியும் அடங்குவர்.

    விபத்து உறுதி செய்யப்பட்டதும் விமானம் விழுந்த பகுதிக்கு மீட்பு படைகள் விரைந்தன. ஜாவா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்கள் மிதந்த படி இருந்ததை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். விமானத்தின் பயணிகள் இருக்கைகள் ஜாவா கடலோரத்தில் உள்ள பெர்டமினா பகுதியில் கரை ஒதுங்கியது.

    பயணிகள் கைப்பைகள், துணிமணிகள், மொபைல் போன்கள், ஐ.டி. கார்டுகள் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற பையும் கரை ஒதுங்கிய பொருட்களில் அடங்கும்.

    விமானம் கடலுக்குள் 98 முதல் 115 அடி (30-35 மீட்டர்) ஆழத்தில் மூழ்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே கடலுக்குள் மூழ்கி கிடக்கும் விமானம் மற்றும் பயணிகள் உடல்களை தேடும் பணியில் சிறப்பு பயிற்சி பெற்ற 30 நீர்மூழ்கி வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

    ரோபோவும் (எந்திர மனிதன்) கடலுக்குள் இறக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் நேற்று காலை 11 மணி வரை உடல்கள் எதுவும் மீட்கப்படவில்லை.

    அதன் பின்னர் விபத்தில் இறந்த 9 உடல்கள் கரை ஒதுங்கின. அவற்றை மீட்பு குழுவினர் மீட்டனர். தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.


    இதற்கிடையே, விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் ஜகார்த்தா சோகார்னோ-கத்தா விமான நிலையத்தில் சோகத்துடன் கூடியுள்ளனர். அவர்கள் மூலம் மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

    விபத்துக்குள்ளான விமானத்தில் தொழில் நுட்ப கோளாறுகள் இருந்தன. அவற்றை நேற்று முன்தினம் இரவு என்ஜினீயர்கள் சரி செய்தனர். அதன் பின்னர் தென்பகாரில் இருந்து ஜகார்த்தாவுக்கு விமானம் பயணிகளை ஏற்றிச் சென்றது.

    நேற்று காலை ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு நகருக்கு புறப்பட்டு சென்ற போது விபத்துக்குள்ளாகி விட்டது என ‘லயன் ஏர்’ தலைமை செயல் அதிகாரி எட்வர்ட் சிரெய்ட் தெரிவித்தார்.

    விபத்தில் பலியான இந்திய விமானி பவ்வி சுனேஜா கடந்த 2 ஆண்டுகளாக மனைவியுடன் ஜகார்த்தாவில் தங்கியிருந்தார். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் டெல்லியில் வசிக்கின்றனர்.

    சுனேஜா விமானி வேலையை மிகவும் நேசித்தார். அந்த பணி செய்வதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார் என அவரது உறவினர் கபிஷ் காந்தி தெரிவித்தார். #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    இந்தோனேசியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #Indonesianplanecrash #LionAirplanecrash #Modi
    ஜகர்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
      
    “லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 189 பேர் சென்றனர். அவர்களில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்தனர்.

    ஜகர்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் 13-வது நிமிடத்தில் திடீரென மாயமானது. அந்த விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறைக்குமான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.



    தகவலறிந்த மீட்புக் குழுவினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் பலியானதாக அவர்கள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான அந்த விமானத்தை பவ்யே சுனேஜா (31) என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், இந்தோனேசியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தோனேசியா விமான விபத்தில் பலியானோரின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரில் இருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான பலத்தையும், தைரியத்தையும் அளிக்க இறைவனிடம் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். #Indonesianplanecrash #LionAirplanecrash #Modi
    இந்தோனேசியாவில் லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதில் 188 பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.

    “லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பயணிகள் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 188 பேர் இருந்தனர்.

    அவர்களில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக் குழந்தைகள், 2 பைலட்டுகள், 5 பணிப்பெண்கள் இருந்தனர்.

    ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் 13-வது நிமிடத்தில் அதாவது 6.33 மணிக்கு திடீரென மாயமானது. அந்த விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறையுடனான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.

    இதனால் ஜகார்தா விமான நிலைய அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விமான பைலட்டுடன் தொடர்பு கொள்ள பல்வேறு வகைகளிலும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.


    மாயமான அந்த விமானத்தை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிய வந்தது. அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விட்டது என்று இந்தோனேசியா மீட்புக்குழு செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீப் உறுதிப்படுத்தினார்.

    இதையடுத்து விமானம் விழுந்த பகுதிக்கு மீட்புப் படைகள் விரைந்தன. ஜாவா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்களும் மிதந்தபடி இருப்பதை மீட்புக் குழுவினர் கண்டுப்பிடித்தனர். அந்த விமானத்தின் பயணிகள் இருக்கைகள் ஜாவா கடலோரத்தில் உள்ள பெர்டமினா எனும் பகுதியில் கரை ஒதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பகுதிக்கு கூடுதல் படகுகள் விரைந்துள்ளன.

    விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விபரம் தெரியாமல் இருந்தது. அதன் பிறகு லயன் ஏர் பேசஞ்சர்ஸ் நிறுவனம் அந்த விமானத்தில் 188 பேர் இருந்த தகவலை வெளியிட்டது. 188 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    பலியானவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் யாராவது பயணிகள் உயிருடன் தத்தளிக்கிறார்களா? என்பதற்கு முன்னுரிமை கொடுத்து தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    188 பேர் உயிரை காவு வாங்கியுள்ள அந்த விமானம் “போயிங் 737 மேக்ஸ் 8” எனும் வகையைச் சேர்ந்ததாகும். 6.20 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் 7.20 மணிக்கு தரை இறங்க வேண்டும். ஆனால் 13 நிமிடத்தில் கடலுக்குள் பாய்ந்து விட்டது.

    விமானம் கடலில் விழுந்ததற்கு என்ன காரணம் என்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    விமானத்துக்கும் விமான கட்டுப்பாட்டு அறைக்கும் உள்ள தகவல் தொடர்பு பதிவின்படி அந்த விமானம் விபத்துக்குள்ளான போது சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அந்த உயரத்தில் இருந்து அந்த விமானம் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்து விழுந்துள்ளது.


    விழுந்த வேகத்தில் விமானம் துண்டு, துண்டாக உடைந்து சிதறி விட்டதாக கூறப்படுகிறது. கடலில் விழுவதற்கு முன்பு அந்த விமானம் வெடித்து சிதறி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    விபத்துக்குள்ளான போயிங் மேக்ஸ் ரக விமானம் உலக அளவில் அதிகம் விற்பனையாகி இருக்கும் பயணிகள் விமானமாகும். கடந்த ஆண்டுதான் போயிங் மேக்ஸ் விமானங்களில் அதிநவீன விமானங்கள் விற்பனைக்கு வந்தன. அதில் முதல் விமானத்தை லயன் ஏர் நிறுவனம்தான் வாங்கி இருந்தது.

    போயிங் மேக்ஸ் ரக விமானம் எரிபொருள் சிக்கனம் கொண்டது. இந்த ரக விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது.

    இந்தோனேசியாவில் கடந்த 2014-ம் ஆண்டு ஏர் ஆசியா விமானம் 162 பயணிகளுடன் கடலில் விழுந்து மாயமானது. அந்த விபத்தின் மர்மம் இன்னும் முழுமையாக தீரவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மிகப்பெரிய விமான விபத்தை இந்தோனேசியா சந்தித்துள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir 
    இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை 6.20 மணியளவில் பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.



    புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேடும் பணியை தொடங்கினர். விமானத்தில் பயணிகள் விமான ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், லயன் ஏர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடி வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் இருக்கைகள் உள்ளிட்ட பாகங்கள் ஜாவா கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. #LionAirFlight #PlaneMissing
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை, பங்க்கால் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. காலை 6.33 மணியளவில் விமானம் கட்டுப்பட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

    புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேடும் பணியை தொடங்கி உள்ளனர். விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. #LionAirFlight #PlaneMissing

    ×