search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leader karunanidhi"

    திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் என டிடிவி தினகரன் மற்றும் பாஜக தலைவர்கள் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளனர். #Karunanidhi #Dinakaran #MuralidharRao #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி செயற்கை சுவாச குழாய் மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.

    இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. இதனால் திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டது குறித்து அறிந்தேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும் என பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘திரு. கருணாநிதியின் உடல் நலனுக்காக நான் பிராத்திக்கிறேன். விரைவில் அவர் பூரணகுணமடைவார் என நம்புகிறேன், அவரது பரந்த அரசியல் அனுபவம் தமிழ்நாடு மற்றும் தேசிய மக்களின் நலனுக்கு பயனளிப்பதாக உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

    மேலும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற நான் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். #Karunanidhi #Dinakaran #MuralidharRao #TamilisaiSoundararajan
    திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தின் முன் நள்ளிரவிலும் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் உடல் நலம் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அறிந்த தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்தின் முன் நள்ளிரவிலும் குவிந்தனர். அவர்கள் கருணாநிதி வாழ்க என கோஷமிட்டனர். நள்ளிரவில் கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார் மு.க.ஸ்டாலின். #Karunanidhi #DMK #Stalin
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் உடல் நலம் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் வீட்டிலேயே இருந்து அவரை கவனித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். தொடர்ந்து திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன்ம் சரத்குமார் உள்பட பலர் வந்தனர். அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.

    இந்நிலையில், அரசியல் தலைவர்கள் வந்து சென்றதும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

    மு.க.அழகிரி நாளை காலை சாலை மார்க்கமாக வந்து கருணாநிதியை சந்திக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ×