search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Labor Assistant Commissioner"

    • 37 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
    • 24 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் நகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் தேசிய பண்டிகையான சுதந்திர தினத்தன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    சுதந்திர தினத்தன்று தொழில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது சம்பளத்துடன் கூடிய மாற்றுவிடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும். நேற்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக, 37 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் 24 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது 51 முரண்பாடுகளும் என மொத்தம் 48 நிறுவனங்களில் 75 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

    ×