என் மலர்

  நீங்கள் தேடியது "koyambedu metro railway station"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இன்று காலை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமற்ற 500 குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  போரூர்:

  சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் குடிநீர் கேன்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

  திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கேன்கள் மூலம் அடைக்கப்பட்ட குடிநீர் அதிக அளவு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

  இதில் காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற கேன்களில் குடிநீர் வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

  இதையடுத்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சென்னை முழுவதும் சோதனை நடத்தி தரமற்ற குடிநீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

  இன்று காலை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ராமராஜ், சதாசிவம் ஆகியோர் தலைமையில் தண்ணீர் கேன்கள் ஏற்றி வந்த ஆட்டோ, வேன் உள்ளிட்ட 11 வாகனங்களை மடக்கி சோதனை நடத்தினர்.

  அப்போது அதில் இருந்த 500-க்கும் மேற்பட்ட கேன்களில் தயாரிப்பு தேதி குறிப்பிடாமலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் வழங்கப்பட்ட தரச்சான்று காலாவதியாகி புதுப்பிக்க படாமலும் சுத்தமற்ற கேன்களில் குடிநீர் கொண்டு செல்வதும் கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக 500 கேன்களையும் பறிமுதல் செய்தனர்.

  தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணமில்லாததால் பயணியிடம் இருந்து ரூ.2 லட்சத்து90 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
  போரூர்:

  பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

  இந்த நிலையில் நேற்று இரவு கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மலர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

  அப்போது மெட்ரோ ரெயிலில் வந்த வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை இசல்தர் தெருவைச் சேர்ந்த மன்னன்கான் என்பவரின் பையை சோதனை செய்தனர். அதில் ரூ. 2 லட்சத்து 90 ஆயிரம் இருந்தது. அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை.

  இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை கோடம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் தினமும் சராசரியாக 55 ஆயிரம் பேர் பயணம் செய்வதாக அதிகாரி தெரிவித்துள்ளார். #MetroTrain
  சென்னை:

  சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

  பயணிகள், பொது மக்கள் இடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவு படுத்தப்பட்டு வருகிறது.

  மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிலையங்களில் தனியார் உணவக சிற்றுண்டி கடைகள், குளிர்பான கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

  அண்ணாநகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உடுப்பி சிற்றுண்டி உணவக கடையில் பயணிகள் கூட்டம் இல்லாததால் திடீரென மூடப்பட்டது என செய்திகள் பரவியது.

  இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

  சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் தினமும் சராசரியாக 55 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். நேற்று மட்டும் 76456 பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

  எனவே மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் எதுவும் குறையவில்லை. பயணிகள் கூட்டம் குறைவு காரணமாக அண்ணாநகர் உள்ளிட்ட 4 ரெயில் நிலையங்களில் சிற்றுண்டி உணவக கடைகள் திடீரென மூடப்பட்டது என்பது வீண் வதந்தியான செய்தி ஆகும். அங்குள்ள ‘உடுப்பி’ சிற்றுண்டி உணவக கடைகளில் உணவு பொருள் விலை அதிகம் காரணமாகத்தான் வியாபாரம் குறைந்துள்ளது. மேலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள சங்கீதா போன்ற உணவக கடைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

  பயணிகள் வழக்கம் போல மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ள ஷேர் டிரிப் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு கார்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  போரூர்:

  சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக ஆட்டோ மற்றும் கார்களை ‘ஷேர் டிரிப்’ முறையில் அறிமுகம் செய்து அதற்கு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.

  அதன்படி ஆட்டோவில் 3கிலோ மீட்டருக்கு பயணம் செய்யும் ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் என்றும் ஏசி காரில் பயணம் மேற்கொள்ள 3கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் கட்டணம் என்று அறிவித்திருந்தனர்.

  இந்தநிலையில் வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த ஒப்பந்தத்தை உடனடியாக மெட்ரோ ரயில் நிர்வாகம் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்க பொதுச்செயலாளர் ஜீட் மேத்யூ தலைமையில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  அவர்கள் தங்களது கார்களை மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு நிறுத்தி கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். #MetroTrain
  ×