என் மலர்
நீங்கள் தேடியது "koradacheri"
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பாக்கத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகள் பவித்ரா. இவர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரி செல்ல இருந்தார். அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இதுபற்றி தெரியவந்ததும் தமிழரசன், பவித்ராவை கண்டித்துள்ளார்.
இதில் மனமுடைந்த பவித்ரா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவாரூர்:
நாகை, கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 33). இவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இருந்து நாகை செல்லும் பஸ்சில் ஏறியுள்ளார்.
பஸ்சின் கடைசி சீட்டில் உட்கார சென்ற அவரை அதில் அமர்ந்திருந்த பெங்களூரைச் சேர்ந்த சதீஸ் அரவிந்த்பால், சீனு, பிரதாபன், சதீஸ்குமார் ஆகிய 4 பேரும் அமர விடாமல் தகராறு செய்து அடித்துள்ளனர்.
இதுபற்றி சுரேந்தர் கொரடாச்சேர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து சுரேந்தரை தாக்கிய 4 பேரையும் கைது செய்தார்.






