என் மலர்

  நீங்கள் தேடியது "Koovathur Resort"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூவத்தூர் சொகுசு பங்களாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம், தங்கம் கொடுக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க கோரி பாமக தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #MadrasHC #PMK #ADMKMLAs #KoovathurResort
  சென்னை:

  தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு தமிழக சட்டசபையில் தன் அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்.

  இதற்கு முன்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சென்னை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு பங்களாவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

  இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-


  கூவத்தூர் சொசுகு பங்களாவில் இருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ., சரவணன், நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப்போட எம்.எல்.ஏ.க்களுக்கு, எடப்பாடி பழனிசாமி பணம், தங்கம் ஆகியவை கொடுப்பதாக கூறினார். எனவே, இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

  இந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

  அப்போது, அரசு தரப்பில் ஆஜராகி, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #MadrasHC #PMK #ADMKMLAs #KoovathurResort
  ×