search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kollu soup"

    • கெட்ட கொழுப்புகளை எல்லாம் கரைக்கக்கூடியது கொள்ளு.
    • வாரத்தில் 3 நாள் எடுத்துக்கொள்ளலாம்.

    உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை எல்லாம் கரைக்கக்கூடியது கொள்ளு. வாரத்திற்கு 3 நாட்கள் இந்த கொள்ளு சூப்பை எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள தேவையில்லா கொழுப்புகளை எல்லாம் கரைத்துவிடும்.

    தேவையானபொருட்கள்:

    கொள்ளு- 50 கிராம்

    பூண்டு- 2 பல்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    மிளகு- ஒரு ஸ்பூன்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    பிளாக் சால்ட்- தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொள்ளுவை போட்டு நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு பிளேட்டில் கொட்டி ஆர வைக்க வேண்டும். பின்னர் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும். இதனை கொள்ளுவுடன் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது நமக்கு கொள்ளுப்பொடி ரெடி. இது 6 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. கொள்ளுசூப் தயார் செய்யலாம். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன்பிறகு ஒரு பல் பூண்டை துருவி இந்த தண்ணீரில் சேர்க்க வேண்டும். அதில் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்க வேண்டும்.

    அதன்பிறகு இதனுடன் நாம் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள மிளகு, சீரக, கொள்ளுபொடியை 2 ஸ்பூன் அளவுக்கு சேர்க்க வேண்டும். இதனை கட்டி இல்லாமல் கலந்துவிட வேண்டும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து வந்த பிறகு இதனை ஒரு வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி அதில் சிறிதளவு பிளாக் சால்ட் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் வெயிட்லாஸ் நைட் ட்ரிங் தயார்.

    இந்த குடிநீரை இரவு உணவு சாப்பிட்ட பிறகு இளம் சூட்டில் பருகிவர வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரண்டு அல்லது மூன்று நாள் குடிக்கலாம். கொள்ளு சூடு என்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் எடுத்துக்கொள்ளலாம்.

    கொழுப்பு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஊற வைத்த கொள்ளு - 100 கிராம்,
    பூண்டு - 2 பல்,
    பட்டை, லவங்கம் - தலா ஒன்று,
    வெண்ணெய் - சிறிது,
    மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - தேவைக் கேற்ப.



    செய்முறை :  

    கொள்ளு, பூண்டு, பட்டை, லவங்கம் இவற்றுடன் 4 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.

    வேகவைத்தவற்றை நன்றாக மசித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

    வடிகட்டிய சூப் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் சேர்த்துப் பருகவும்.

    சத்து நிறைந்த கொள்ளு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுவுக்கு உண்டு. இன்று கொள்ளுவில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை சூப்பாகவும் அருந்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - கால் கப்,
    புளி - நெல்லியளவு,
    தக்காளி - 2,
    மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 3,
    பூண்டு - 6,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள் தூள், கடுகு - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை:

    தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    கொள்ளுவை கல் இல்லாமல் சுத்தம் செய்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் களைந்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் கொள்ளை மிக்சியில் அரைத்தெடுக்கவும்.

    மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தெடுக்கவும்.

    வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    இதை சூப்பாகவும் குடிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×